புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தார்.. எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்
வேலூர்: எதிர்க்கட்சியாக இருக்கும் போது எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என்று கூறும் எடப்பாடி, முன்பு ஆளும் கட்சியாக இருந்த போது பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும் ஆதரவு அளித்து அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறியதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் களம் கொதித்துக்கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என தமிழத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று வேலூரில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:- எதிர்க்கட்சியாக இருக்கின்ற போது எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று பேசினார். ஆனால், முன்பு ஆளும் கட்சியாக இருந்த போது பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும் அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு கொடுத்தார்.
ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடினோம். இப்போது ஆளும் கட்சியாக ஆளுநர்களின் அத்துமீறலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று போராடி வெற்றி கண்டிருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னாதாக நேற்று எடப்பாடி பழனிசாமி அரக்கோணத்தில் வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய எடப்பாடி, "எடப்பாடி பழனிசாமி மோடியை எதிர்க்க மாட்டுக்கிறாரு.. அவரை கண்டால் பயப்படுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.. என்னப்பா எதிர்க்கிறது.. நாங்களா ஆட்சியில் இருக்கிறோம். ஆட்சியில் இருக்கிறவர்கள் தானே எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கிறவர்கள் போய் என்ன எதிர்க்க முடியும்.
ஸ்டாலினை போல் முதல்வராக இருந்துகொண்டு இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய எந்த திட்டமாவது தமிழகத்தில் அமல்படுத்த முற்பட்டால் யாராக இருந்தாலும் எதிர்த்து கண்டிப்பாக குரல் கொடுப்போம். உதாரணத்திற்கு காவிரி நதி நீர் பிரச்சினை" என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடியின் பேச்சுக்கு பதில் கொடுக்கும் வகையில் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications