போதை மருந்து வாங்கிக் கொடுக்காததால் புவனேஸ்வரி செய்த விபரீதம்! கள்ளக்காதலன் அதிர்ச்சி
திருப்பத்தூர்: போதை மருந்து வாங்கிக் கொடுக்காததால் கள்ளக்காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு அடுத்த சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த தியாகு (36) என்பவர் திருப்பத்தூர் பகுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் கூலி தொழிலாளியான குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி (35) ஆகிய இருவரும் வேலை செய்து வந்துள்ளனர்.
புவனேஸ்வரிக்கு முதலாளியாக இருந்த தியாகுவை பிடித்துப் போனதால் புவனேஸ்வரிக்கும் தியாகுவுக்கும் இடையே கள்ளக் காதல் மலர்ந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரம் அறிந்த வேலாயுதம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி புவனேஸ்வரியை கைவிட்டு சொந்த ஊரான குடியாத்தம் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்.

தலைக்கேறும் போதை
இந்த நிலையில் இருவரும் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். ஒவ்வாமை காரணமாக அடிக்கடி போதை மாத்திரை மற்றும் மருந்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள். போதை தலைக்கேறிய பின்னர் இருவரும் உல்லாசமாக அடிக்கடி இருந்து வந்துள்ளார்கள்.

சிகிச்சை
இதேபோன்று வருடக்கணக்கில் போதை மருந்தை எடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தியாகு போதை மருந்தை கைவிட நினைத்து அதற்கு ஏற்றவாறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தபோதிலும் புவனேஸ்வரி போதை மருந்து மற்றும் மாத்திரைகளை கை விடாததால் செய்வதறியாது திகைத்த தியாகு ஒரு கட்டத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுப்பதை நிறுத்தி இருக்கிறார்

மருந்து கிடைக்கவில்லை
இருந்த போதிலும் புவனேஸ்வரியே மருந்து கடைக்கு சென்று போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் புவனேஸ்வரிக்கு பணம் கொடுக்காமல் உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி கொடுத்துள்ளார். போதை மருந்து இல்லாமல் மனமுடைந்த புவனேஸ்வரி ஆள் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கள்ளக்காதலன்
இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இதுகுறித்து கள்ளக் காதலனான தியாகுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications