ரூ.60,000 கோடி.. ஏலகிரி பங்களா ஆடியோ.. மிரட்டும் குடியாத்தம் குமரன்! துரைமுருகனுக்கு புது தலைவலி!
சென்னை: திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், துரைமுருகன், கதிர் ஆனந்த் மீது அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை அடுக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
திமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதன் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

குடியாத்தம் குமரன் கடந்த 2019ஆம் ஆண்டிலும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்பட்டார். அமைச்சர் துரைமுருகனையும், அவரின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த்தையும் விமர்சித்து குடியாத்தம் குமரன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானதால், அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. பின்னர், அமைச்சர் துரைமுருகனிடம் மன்னிப்புக் கேட்டதால், மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து இழிவான வார்த்தைகளால் திட்டிப் பேசி இருந்தார் குடியாத்தம் குமரன். மேலும், நடிகை விந்தியா குறித்தும் இழிவாகப் பேசி இருந்தார். இது தொடர்பாக குமரன் மீது அதிமுக நிர்வாகி விந்தியா புகார் போலீசில் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பாக 'எம்.பி கதிர் ஆனந்த் என் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார். துரைமுருகனும் கட்சியிலிருந்து என்னை நீக்கப் பார்க்கிறார். என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் குமரன். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்தே குடியாத்தம் குமரன் மீது மீண்டும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வந்த உடனேயே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பற்றியும், அவரது மகனும் எம்.பியுமான கதிர் ஆனந்த் பற்றியும் அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் குடியாத்தம் குமரன். "நான் மண்ணுக்குள் போகும் வரை தி.மு.க உடன்பிறப்புதான். செருப்பால் அடித்தாலும் எனது கட்சி திமுக தான். இந்தக் கட்சிக்காகவும், தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்காக என் உயிரையே கொடுப்பேன்.
எனக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கதிர் ஆனந்த் தான் இந்த மாவட்டத்துக்கே பிரச்சனை. சேர்மன் தேர்தலில் திமுகவை எதிர்த்து நின்ற பாமகவுக்கு, ஒரு பெரிய தொகைக்கான டெண்டரை வழங்கியுள்ளார் கதிர் ஆனந்த். திமுககாரனுக்கு எதிராகவே கதிர் ஆனந்த் செயல்பட்டு வருகிறார். தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் கட்சிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் ரூ.60 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார். அது பற்றிய உண்மைகளை வெளியிடுவேன். அமைச்சர் துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த் இருவரும் ஏலகிரி மலை பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன். நான் அவற்றை வெளியிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது." என்று பரபர குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் குடியாத்தம் குமரன்.
அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், திமுக நிர்வாகியே, அமைச்சர் துரைமுருகன் பற்றி அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் குமரன் ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி இருப்பதால், எதிர்க்கட்சிகளும் இதனை பூதாகரமாக்க வாய்ப்புள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications