வேலூருக்கே ஹேப்பி.. "அந்த 1 ஆடு".. குஷியில் துள்ளிய விவசாயிகள்.. கறிக்கடைகாரரை சுண்டியிழுத்த "ஜோடி"
வேலூர்: ஒரே நாளில் வேலூர் கால்நடை சந்தை அனைவரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. விவசாயிகளும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. என்ன காரணம்?
தமிழகத்தின் கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றது.. நிறைய கால்நடை சந்தைகள், வார வாரம் அல்லது மாத மாதம் நடப்பது வழக்கமான ஒன்று.

வெளிமாவட்டம்: இதுபோன்ற கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக கைகொடுத்து வருகிறது. இந்த தமிழகத்தின் சந்தைகளிலிருந்து, வெளியூர்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும்கூட, நிறைய கிராக்கி இருக்கிறது.
அதிலும் பண்டிகை காலங்களில், கால்நடை சந்தைகளில் கூடுதல் விற்பனைகள் ஏற்பட்டு, கறிக்கடைக்காரர்களையே குஷிப்படுத்திவிடும். இப்படித்தான் சமீபத்தில் முடிந்த பொங்கல் பண்டிகையின்போதுகூட, அமோக விற்பனை நடந்து முடிந்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச்சந்தையாகட்டும், நெல்லை மேலப்பாளையம் சந்தையாகட்டும், வேலூர் சந்தையாகட்டும், ஆடுகளை வாங்குவதற்காகவே பொதுமக்கள் இந்த சந்தைகளுக்கு திரண்டு வந்தனர்.
செம்மறி ஆடுகள்: செம்மறி ஆடு, வெள்ளாடுகள் என்று பலவகையான ஆடுகளை வியாபாரிகள் கொண்டுவந்திருந்தனர்.. ஆனால், இவைகளில் வெள்ளாடுகளுக்குதான் நிறைய கிராக்கி இருந்ததாம்.. ஒவ்வொரு வெள்ளாடுகளின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது... கறியின் எடை அதிகமாக இருந்தால், அதற்கேற்ற விலையும் கணிசமாக உயர்த்தி விற்கப்பட்டது.. அந்தவகையில், ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது..
அந்தவகையில், நேற்றைய தினமும் வேலூர் கே.வி.குப்பம் வார சந்தையில் கால்நடைகள் படுஜோராக விற்பனையாகின.. எப்போதுமே ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கேவி குப்பத்தில் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். நேற்று அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சந்தை வழக்கம்போல் கூடியது.. மாவட்டம் முழுவதிலிருந்தும் வியாபாரிகள் திரண்டிருந்தனர்.
ஆடுகள்: இதைத்தவிர, அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் லோடு வேன் மூலம் கொண்டுவரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தார்கள்.. ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது.
வெள்ளாடுகள், கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் என ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தன.. சந்தையில் சுமார் 350 ஆடுகள் கொண்டுவரப்பட்டு தலா ஒரு ஆடு ரூபாய் 15 ஆயிரம் முதல் ரூபாய் 20 ஆயிரம் வரை, ஆட்டுக்குட்டிகள் ரூபாய் 3,500 முதல் ரூபாய் 5ஆயிரம் வரையில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மந்த வியாபாரம்: இத்தனை வாரமும் வியாபாரம் மந்தமாகி சோர்ந்து போயிருந்த நிலையில், இனி வரும் வாரங்களில் ஆடுகள் வியாபாரம் ஜோராக நடக்கும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
இதுபோலவே, வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் சந்தை கூடும்.. இதில், கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1300க்கும் மேற்பட்ட மாடுகளும், 250க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
மகாராஷ்டிரா ஆடு: இதன் காரணமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை சுமார் ரூ.1 கோடியை தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.இதில், மகாராஷ்டிராவில் வளர்க்கப்படும் பாண்டம் பக் ரகத்தை சேர்ந்த ஒரு ஜோடி ஆட்டினை, ஆந்திர மாநில வியாபாரி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தாராம்.. இதில் ஒரு ஆடு, ரூ.24 ஆயிரம் வீதம் ஜோடி ரூ.48 ஆயிரத்துக்கு விலைபோனதாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications