காட்டுக்குள் ஷாக்.. இளம் பெண்ணை ஓட ஓட விரட்டிய கும்பல்.. விறகு கட்டையை தலையில் வைத்த மக்கள்!

மாணவியை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அமிர்தி காட்டு பகுதியில் கல்லூரி மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் வேலூர் கோட்டை பூங்கா பகுதியில் காதலல் ஜோடி உட்கார்ந்து இரவு நேரத்தில் பேசி கொண்டிருந்தது.. அப்போது வந்த 3 பேர் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை நாசம் செய்துவிட்டு தப்பியது.. அவர்களை போலீசார் கைது செய்தது.. இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த பகீர் இதே வேலூரில் நிகழ்ந்துள்ளது.

வேலூர் அடுத்த அமிர்தியில் உள்ளது வன உயிரின பூங்கா... இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து போவார்கள்.குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை இங்குதான் சுற்றுலா அழைத்து வருவது வழக்கம்.. காலை முதல் மாலை வரை மட்டுமே வனத்துறை சார்பில் இங்கு வந்து செல்ல அனுமதி உண்டு.

ஜோடி

ஜோடி

இந்நிலையில், சில தினங்களுக்கு ஒரு ஜோடி இங்கு வந்துள்ளது... அந்த பெண் ஒரு கல்லூரி மாணவி.. காதலனும் கல்லூரி மாணவர்தான்.. இருவரும் அமிர்தி பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தனர்.. ஆனால், அப்படியே பேசிக் கொண்டு, பூங்காவில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு காதலியை அழைத்து சென்றார் மாணவர்.

பலாத்காரம்

பலாத்காரம்

அந்த காட்டுக்குள் ஏற்கனவே 3 இளைஞர்கள் தயாராக இருந்தனர்.. அப்போது காதலன் உட்பட 4 பேருமே அந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.. அந்த மாணவியின் டிரஸ்ஸை கிழித்துள்ளனர்.. கிழிந்து தொங்கும் ஆடையுடன் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி கொண்டே ஓடினார் மாணவி.. ஆனாலும் விடாமல் 4 பேரும் துரத்தி வந்தனர்.

பதறி ஓடினார்

பதறி ஓடினார்

அந்த சமயத்தில், அமிர்தி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 68 வயது தாத்தா அங்கு விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.. தண்ணீர் தாகமாக இருந்தால், பக்கத்தில் இருந்த ஓடையில் தண்ணீர் குடிக்க போனார்.. அந்த சமயத்தில் பெண்ணின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அதற்குள் மாணவி, அந்த முதியவரை பார்த்துவிட்டு, அழுதுகொண்டே அவரிடம் பதறி ஓடினார்.. உடனே அந்த பெரியவர் விறகு வெட்ட வைத்திருந்த கத்தியை காட்டி அந்த 4 பேரையும் மிரட்டி எச்சரித்தார்.

விசில் ஊதினார்

விசில் ஊதினார்

ஆனாலும் 4 பேரும் தாத்தாவை தாக்க முன்வந்தனர்.. ஆனால் அதற்குள் அவர் கையில் இருந்த விசில் எடுத்து ஊத ஆரம்பித்தார்... இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மாணவர்கள், அலறி அடித்து தப்பி ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் இந்த தாத்தா விடவில்லை.. அந்த இளைஞர்களை துரத்தி கொண்டே ஓடினார்.. அதற்குள் அந்த பகுதி மக்களும் விரைந்து வந்தனர்.. 3 பேர் தப்பிவிட்ட நிலையில் ஒருவரை மடக்கி பிடித்தனர்..

விறகுக்கட்டை

விறகுக்கட்டை

ஊர்மக்களிடம் அந்த இளைஞர் வசமாக மாட்டி கொண்டார்.. சரமாரி அடி வாங்கினார்.. அந்த தாத்தா வெட்டிய விறகு கட்டையை தூக்கி அந்த இளைஞன் தலையில் வைத்து, 6 கிமீ தூரத்துக்கு நடந்து வருமாறு கிராம மக்கள் சொன்னார்கள்.. அதன்படியே விறகுக்கட்டையை சுமந்து வந்தார் மாணவன்.. ஊருக்குள் நுழைந்ததும் திரும்பவும் வெளுத்தெடுத்தனர்.. பிறகு மாணவியின் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் பத்திரமாக அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மக்களிடம் தர்ம அடி வாங்கியவர்தான் அந்த பெண்ணின் காதலன்.. வேலப்பாடி பகுதியைச் சேர்ந்தவராம்.. அவர்தான் நண்பர்களை பிளான் செய்து காட்டுக்குள் வரவழைத்துள்ளார் என்று தெரியவந்தது.. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை நடந்து பீதியில் உள்ள மாவட்ட மக்களுக்கு இந்த சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+