மீண்டும் அதிரடி சோதனை.. துரைமுருகன் மகனின் கல்லூரியில் ஐடி ரெய்டு.. நீடிக்கும் பதற்றம்!
வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. பல இடங்களில் இந்தியா முழுக்க வருமான வரித்துறையும், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள் .
நேற்று முதல்நாள் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. தேர்தல் பறக்கும்படை பிரிவினர் இந்த சோதனையை நடத்தினார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன சோதனை
சுமார் 14 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் கடைசியில் எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று துரைமுருகன் தரப்பு தெரிவித்து இருக்கிறது. சுமார் 40 அதிகாரிகள் துரைமுருகனுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை செய்தனர்.

எவ்வளவு ரூபாய்
அதேபோல் அதிகாரிகள் தரப்பில் ரூபாய் 10 லட்சம் வரை இந்த சோதனையில் சிக்கியதாக செய்திகள் வெளியானது . கணக்கில் வராத பத்து லட்சம் ரூபாய் சிக்கியது. துரைமுருகன் வீட்டில் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது.

மீண்டும் சோதனை
இந்த நிலையில் தற்போது மீண்டும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். கதிர் ஆனந்திற்கு சொந்தமாக வேலூரில் இருக்கும் கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை நடத்தி வருகிறார்கள். 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

சிக்கல்
அதேபோல் பள்ளிக்குப்பத்தில் திமுக பகுதி செயலாளர் வீட்டிலும் தீவிர சோதனை நடக்கிறது. திமுக பகுதி செயலாளர் சீனிவாசன் வீட்டிலும் இந்த சோதனை நடக்கிறது. இதனால் தற்போது திமுகவினர் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications