துரைமுருகன் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள்.. ரூ.10 லட்சம் பறிமுதல்
Recommended Video

வேலூர்: துரைமுருகன் வீட்டிலிருந்து 2 கட்டைப் பைகளில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதேபோல ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அதில் துரைமுருகன் இல்லத்தில் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சோதனை காலை 11 மணியளவில் நிறைவடைந்தது. இதன்பிறகு அதிகாரிகள் இரு கட்டைப்பைகளில் ஆவணங்களை கட்டுக்கட்டாக எடுத்துச் சென்றனர்.
இவை அனைத்தும் பல்வேறு பரி வர்த்தனைகள் தொடர்பான நகல்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், துரைமுருகன் வீட்டில் மொத்தம் ரூ.19 லட்சம் பணம் இருந்துள்ளது. துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கையிருப்பாக ரூ.9 லட்சம் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், வீட்டில்கூடுதலாக இருந்த ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதனால் துரைமுருகன் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று, துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் நடைபெற்று வரும் வருமான வரி துறை சோதனை எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications