நெஞ்சே பதறிடுச்சே.. கர்ப்பிணியை அடக்கம் செய்த குழிக்குள் "நிர்வாணமாக" இறங்கி கணவர் செய்த காரியம்
கர்ப்பிணி மனைவியின் இறுதி சடங்கில் அவரது கணவர் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்
திருப்பத்தூர்: கர்ப்பிணி மனைவியை அடக்கம் செய்யும் குழியில், திடீரென நிர்வாணமாக இறங்கிவிட்டார் கணவர்.. இதை பார்த்து அந்த ஊர் மக்களே பதறிப்போய் விட்டனர்.. என்ன காரணம்?
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ளது சின்ன பசிலிகுட்டை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ராஜாதேசிங்கு.. இவரது மனைவி பெயர் பூர்ணிமா.
கடந்த நான்கு வருடங்கள் முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. பூர்ணிமாவுக்கு 25 வயதாகிறது.. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.. இப்போது 5 மாத கர்ப்பிணியாகவும் பூர்ணிமா இருந்துள்ளார்.

வாட்டர் சர்வீஸ்
இந்த நிலையில், அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இவர்களின் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மாட்டு கொட்டகை உள்ளது.. சம்பவத்தன்று அந்த மாட்டு கொட்டகையை, வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியை வைத்து, பூர்ணிமா சுத்தம் செய்து கொண்டிருந்தார்.. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கருவியில் இருந்து மின்சாரம் தாக்கிவிட்டது.. இதனால் அலறி கத்திய பூர்ணிமா தூக்கி எறியப்பட்டார்.. அந்த அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. ஆனால், அதற்குள் பூர்ணிமா சம்பவ இடத்திலேயே சுருண்டு உயிரிழந்துவிட்டார்.

போஸ்ட் மார்ட்டம்
பூர்ணிமா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும், பூர்ணிமாவின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் முன்னிலையில், அடக்கம் செய்ய ஏற்பாடானது.. மயானத்தில், சடலத்தை புதைக்க குழி தோண்டப்பட்டது.. அந்த நேரம் பார்த்து, பூர்ணிமாவின் கணவர் ராஜதேசிங்கு, திடீரென குழி முழுவதும் உப்பை எடுத்து கொட்டினார்.. பிறகு, அந்த குழியில் திடீரென நிர்வாணமாக குதித்தார்.. உடனே அந்த குழியிலேயே பூஜையும் செய்ய தொடங்கினார்.

குழிக்குள் நிர்வாணம்
தன்மீதும் உப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டார்.. பிறகு அந்த குழியில் படுத்தும் கொண்டார்.. குழியில் படுத்தவாறே பூஜைகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்.. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் வெலவெலத்து போய்விட்டனர்.. இதுகுறித்து அந்த ஊர் மக்கள் சொல்லும்போது, சில வருஷங்களுக்கு முன்பு, இந்த ராஜதேசிங்கு சாமியார் போல் மாறினாராம்.. அப்போது தன்னை ஒரு சிவபக்தர் என்று சொல்லி வந்தாராம்.. அதனால்தான், மனைவியின் உடலை புதைக்கும்போது, குழியில் இறங்கி தன்னை அகோரி போல நினைத்து பூஜை செய்துள்ளார்.. இதை பார்த்து பலர் பயந்துவிட்டனர் என்று சொல்கிறார்கள்.

உப்புக்குழி
இப்படி அகோரிகள் பூஜை செய்வது, நம் தமிழகத்தில் அடிக்கடி நடக்கக்கூடிய சம்பவம்தான்.. திருச்சியில் மணிகண்டன் என்ற அகோரி பற்றி அடிக்கடி செய்திகள் வெளிவரும்.. இவர் எப்பவுமே உடம்பு பூராவும் திருநீறுதான் பூசியிருப்பார்... திடீர் திடீரென்று நடுராத்திரி உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டு பூஜை செய்வார். அப்படியே எழுந்து சுடுகாட்டுக்கு போய்விடுவார். அங்கே எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை பிட்டு சாப்பிடுவார். இவரது அம்மா 4 வருடத்துக்கு முன்பு இறந்தபோது, அம்மாவின் சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்து பூஜை செய்தபோது அந்த செய்திகள் அப்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.. அதுபோலவே, திருப்பத்தூர் சம்பவமும் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications