Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் ‘சீட்’ இவருக்குதானாமே.. அமித் ஷாவுக்கு செங்கோல் + ஐஸ்.. அப்போ கன்பார்மா? பரபரக்கும் தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

வேலூர் : வேலூரில் நடைபெறும் பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகி விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 2024 லோக்சபா தேர்தலில் வேலூர் சீட் உறுதியாக இவருக்குத்தான் என்கிறார்கள்.

பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, 24 முக்கிய பிரபலங்களைச் சந்தித்து உரையாடினார்.

Is Vellore lok sabha seat reserved for this candidate?

இன்று, கோவிலம்பாக்கம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2024 லோக்சபா தேர்தலையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியினருடன் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க உழைக்கவேண்டும். பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என அமித் ஷா இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலமாக சென்னையிலிருந்து வேலூர் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து கந்தனேரி சென்று, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதோடு மட்டுமல்ல, மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு செங்கோல் வழங்கி வாழ்த்தியுள்ளார் ஏ.சி.சண்முகம். தனது பேச்சிலும், வேலூர் தொகுதியை தான் விரும்புவதை சூசகமாகவும் தெரிவித்துள்ளார் ஏசி சண்முகம்.

இந்தக் கூட்டத்தில் பேசிய புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நான் 1980-களில் ஆரணியில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவன். 1984-இல் வேலூர் லோக்சபா தொகுதியில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவன். 2014-இல் பாஜக வேட்பாளராக தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிட்டோம். கூட்டணியில் உள்ளவர்கள் சோடைபோனதால் தோல்வியுற்றோம்.

'வேலூர் கோட்டையில் தாமரை மலர்கிறது' என சோ எழுதினார். ஆனால், கூட்டணி துரோகத்தால் தவறவிட்டோம். 2019-இல் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றோம். அப்போதும் கூட்டணியில் இருந்த சதிகாரர்கள் சதி செய்தார்கள். வர உள்ள 2024ஆம் ஆண்டு தேர்தலில் முதல் கூட்டமாக வேலூரை தேர்வு செய்து இருக்கிறார்கள். அமித்ஷா வேலூரில் அமர்ந்து விட்டார். இனி வேலூர் பாஜகவின் கோட்டைதான்.

இந்தியாவின் அயன் மேன் அமித்ஷா அவர்களின் முகம் பேபி ஃபேஸ். வல்லபாய் படேலை நாம் பார்த்ததில்லை, ஆனால் அவரின் மறு உருவமாக அமித்ஷா உள்ளார். நடைபெற உள்ள 2024 லோக்சபா தேர்தலில் குறைந்தது 350 தாமரை வேட்பாளர்கள் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளார்கள்" என்றார்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியை குறிவைத்து ஏசி சண்முகம் பலதரப்பட்ட வேலைகளை அத்தொகுதியில் செய்து வருகிறார், எனவே அவர் பாஜக சார்பாக தாமரை சின்னத்தில் நிற்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இன்று பாஜக கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்றுப் பேசியதும், அமித் ஷாவுக்கு செங்கோல் அளித்ததும் இதனை உறுதி செய்கின்றன.

நேற்று இரவு அமித் ஷா சென்னையில் 24 பிரபலங்களைச் சந்தித்து கலந்துரையாடிய லிஸ்ட்டிலும் ஏ.சி.சண்முகம் இடம்பெற்றிருந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வருகை தரும்போதெல்லாம் ஏ.சி.சண்முகம் அவர்களைச் சந்தித்துப் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+