வேலூரே குலுங்குது.. படையெடுத்து வந்த ஐடி ஊழியர்கள்.. நாம் தமிழர் தீபலட்சுமிக்காக!
நாம் தமிழர் கட்சிக்காக ஐடி ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
Recommended Video
வேலூர்: யாருப்பா சொன்னது.. விவசாயி சின்னம் இருந்தால், விவசாயிகள் மட்டும்தான் ஓட்டு போடுவாங்கன்னு.. தீபலட்சுமிக்கு பாருங்க.. சென்னை, பெங்களூரில் இருந்து ஐடி ஊழியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வேலூருக்கு வந்துவிட்டார்கள்!
அதிமுக, திமுக என்ற ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில் நுழைந்து தில்லாக போட்டியில் குதித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இங்கு அக்கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கூட இப்படி இல்லை.. தேர்தல் முடிவின் தாக்கமோ அல்லது அரசியல் கட்சிகளில் 3-வது இடத்தை முன்னேற்றமோ தெரியவில்லை.. ஐடி ஊழியர்கள் எல்லாம் கிளம்பி வேலூருக்கு பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார்கள்.

ஊழியர்கள்
சென்னை, பெங்களூரில் உள்ள முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தான் இவர்கள் எல்லோரும், வாணியம்பாடி, அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஐடி ஊழியர்கள் தீபலட்சுமிக்காக ஓட்டு கேட்டு வருகின்றனர்.

விவசாயம்
இதை பற்றி விக்னேஷ் என்ற ஐடி ஊழியர் சொல்கிறார், "நாங்கள் தலைமுறை தலைமுறையா விவசாய குடும்பம்தான். என்னமோ தெரியல, என்னையும் அறியாமல் நான் அதில இருந்து வெளியேறிட்டேன். ஆனால் இப்போ விவசாயத்தின் முக்கியத்துவத்தை என்னை போன்ற நிறைய இளைஞர்களுக்கு உணர்த்தி உள்ளது நாம் தமிழர் கட்சி. அது முன் வைக்கும் தற்சார்பு பசுமை தாய்மை உற்பத்தி பொருளாதாரக் கொள்கை ஒன்று போதும், எல்லாருக்கும் வேலை கிடைச்சிடும்" என்கிறார்.

பிரச்சாரம்
இப்படி ஐடி ஊழியர்கள் லீவு போட்டுவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளன. பிரச்சார கூட்டங்களுக்கு ஆட்டு மந்தைகள் போல வேனில் மக்களை அழைத்து செல்வதை பார்திருக்கிறோம்.. ஓட்டுக்கு 500, 1000 பணத்தை தருவதை பார்த்திருக்கிறோம்!

கரும்பு விவசாயி
ஆனால் ஐடி ஊழியர்கள் பந்தாவாக டிரஸ் போட்டுக் கொண்டு, கையில் கரும்பு விவசாயி சின்னத்தை கெத்தாக பிடித்து கொண்டு வேலூரில் ஓட்டுகேட்டு வருவதை பார்க்கவே புதுசாக இருக்கிறது.. மக்களை நெருங்கி செல்லும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த வெற்றி இது!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications