வேலூர் சிறைக்கு காலை 6 மணிக்கே வந்த ஆட்டோ.. பையில் 2 தலைகள்.. கள்ளக்குறிச்சி கள்ளக்காதல் முழு கதை
வேலூர்: வேலூர் மத்திய சிறைசாலையின் வாயிலில் காலை 6 மணிக்கு ஒரு ஆட்டோ வந்து இறங்கியது. அந்த ஆட்டோவில் ஒரு 60 வயது முதியவர் வந்திறங்கினார். சிறையின் நுழைவுவாயில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தவரை, ஒரு கட்டத்தில் சிறைக்காவலர் எழுந்து சென்று, யார் நீங்க.. இங்க ஏன் வந்திருக்கீங்க என்று கேட்டுள்ளார். அப்போது வாயை திறந்த அந்த முதியவர் தான் கள்ளக்குறிச்சி கொளஞ்சி. பையில் இருந்து இரண்டு தலைகளை எடுத்து வைத்து கதையை கூறியுள்ளார். அதை கேட்டு போலீசார் ஆடிப்போனார்கள்.
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கொளஞ்சி கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கலியம்மாள் என்பவருடன் திருமணமாகி 5 குழந்தைகள் இருந்தன. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. கலியம்மாள், தனது 3 குழந்தைகளுடன் கணவர் கொளஞ்சியை பிரிந்து சென்று தனியாக வசிக்கிறார்.

20 வயது குறைவு
இதையடுத்து கொளஞ்சி, நாட்டார்மங்கலத்தை சேர்ந்த 40 வயதாகும் லட்சுமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கொளஞ்சி தன்னைவிட 20 வயது குறைவான லட்சுமியை திருமணம் செய்திருந்தார்.
இவர்களது திருமண வாழ்க்கையில் கள்ளக்காதல் சிக்கலை ஏற்படுத்தியது. லட்சுமிக்கு தங்கராசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறி உள்ளது.
கள்ளக்காதல்
கொளஞ்சி வேலை காரணமாக வெளியூர் சென்று விடுவாராம். அப்போது லட்சுமியும், தங்கராசுவும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார்களாம். இந்த கள்ளக்காதல் விவகாரம் கொளஞ்சிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் லட்சுமியையும், தங்கராசுவையும் கண்டித்து வந்தாராம். இருப்பினும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.
மறைந்து கொண்ட கணவன்
நேற்று முன்தினம் இரவு கொளஞ்சி வெளியூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அருகில் உள்ள இடத்தில் மறைந்து கொண்டாராம். தனது கணவர் வெளியூர் சென்றதாக நினைத்த லட்சுமி, தனது கள்ளக்காதலன் தங்கராசுவை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தாராம். அதன்படி தங்கராசுவும் இரவில் லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்தார்களாம்.
மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்
முன்னதாக தங்கராசு தனது வீட்டிற்கு செல்வதை பார்த்த கொளஞ்சி பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு கொளஞ்சியும் மாடிக்கு சென்றாராம். அப்போது லட்சுமியும், தங்கராசுவும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கொளஞ்சி அரிவாளால் தங்கராசுவை வெட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி கொளஞ்சியை தடுக்க முயன்றார். தொடர்ந்து கொளஞ்சி தான் வைத்திருந்த அரிவாளால் லட்சுமியையும் சரமாரியாக வெட்டினாராம்.
நம்ப மறுத்த போலீஸ்
காலை 6.30 மணி அளவில் பணியில் இருந்த சிறை காவலர்கள் ஏன் நீண்ட நேரமாக இங்கு அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு கொளஞ்சி தனது மனைவியையும், மனைவியின் கள்ளக்காதலனையும் வெட்டிக்கொலை செய்துவிட்டதாகவும் என்னை ஜெயிலில் அடைத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். முதலில் சிறை காவலர்கள் நம்பவில்லை. விளையாட்டு தனமாக கூறுகிறாரோ என்று சந்தேகித்து உள்ளனர்.

பையில் இரண்டு தலைகள்
இதனால் சந்தேகப்பட வேண்டாம் என்ற கொளஞ்சி இதோ இந்த கட்டப்பையை பாருங்கள் என, துண்டிக்கப்பட்ட 2 பேரின் தலைகளை வைத்திருந்த பையை திறந்து போலீசாரிடம் காண்பித்துள்ளார். அந்தப்பையில் ரத்தக்கறைகளுடன் 2 தலைகள் இருந்ததை பார்த்து சிறை காவலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பாகாயம் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் கொளஞ்சியை பிடித்து அவர் வைத்திருந்த தலைகளை கைப்பற்றி அவரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி போலீசார் கைது
பின்னர் அவர் வைத்திருந்த தலைகள் லட்சுமி, தங்கராசு ஆகியோரின் தலைகள் தானா என்பதை உறவினர்கள் மூலம் போலீசார் உறுதி செய்ய கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பத்தை உறுதி செய்தனர். தொடர்ந்து வேலூர் போலீசார் கொளஞ்சியை கள்ளக்குறிச்சி போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும் அவர் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொளஞ்சியை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை, கணவன் கொன்று, வேலூர் மத்திய சிறையில் சரண் அடைந்த விதத்தை பார்த்து போலீசாரே ஆடிப் போனார்கள்.












Click it and Unblock the Notifications