வேலூர் ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. காட்பாடி-ஜோலார்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து!
வேலூர்: காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் மெமு ரயில்கள் இன்று இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. எனவே வேலூர் மக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றார்போல மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பெங்களூருக்கும், சென்னைக்கும் இடைப்பட்ட நகரம்தான் வேலூர். ஒரு காலத்தில் இது ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அரக்கோணம் தொடங்கி, ஜோலார்பேட்டை வரை இன்றும் பலரால் வேலூராகத்தான் பார்க்கப்படுகிறது.

வேலூர் மாவட்ட மக்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பை தேடி சென்னைக்கு வருகின்றனர். குறிப்பாக காட்பாடியிலிருந்து ரயில் ஏறினால் 1.30-2 மணி நேரத்திற்கெல்லாம் சென்ட்ரல் வந்துவிடலாம். சிலர் பெங்களூருக்கும் வேலை தேடி பயணிக்கின்றனர். இவர்கள் காட்பாடியிலிருந்து 3-4 மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைகிறார்கள்.
இவர்களுக்கான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கு மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 10.30 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்படும் இந்த ரயில், 11.45 மணிக்கு ஜோலார்பேட்டை சென்று சேர்கிறது. லத்தேரி, விரிஞ்சிபுரம், காவனூர், குடியாத்தம், மேல் ஆத்தூர், வளத்தூர், பச்சகுப்பம், ஆம்பூர், வாணியம்பாடி, கெட்டாண்டபட்டி என இறுதியாக ஜோலார்பேட்டைக்கு செல்கிறது.
வேளாண் பொருட்கள், காலணிகள், இதர வணிக பொருட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல இந்த மெமு ரயிலை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று இந்த மெமு ரயில் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, "அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் லத்தேரி மற்றும் காவனூா் ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் இன்று (ஜூலை 28) காலை 10.05 மணி முதல் பிற்பகல் 1.35 மணி வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு, ஜோலார்பேட்டை செல்லும் மெமு ரயில், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டையிலிருந்து பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி செல்லும் மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெமு ரயில் ரத்து காரணமாக வேலூர் மாவட்ட மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications