எனக்கு பொறக்காத குழந்தை.. லாவண்யாவோட ஜாலியாவும் இருக்க முடியலை.. அதான்.. 2வது கணவரின் ஷாக் முடிவு!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: "அந்த குழந்தை எனக்கு பொறக்கல.. லாவண்யாவுக்கு பொறந்தது.. எங்களால ஜாலியாவும் இருக்க முடியல.. அதனாலதான் அந்த குழந்தையை தூக்கி சுவற்றிலும், தரையிலும் ஓங்கி.." என்று பதைபதைக்க வாக்குமூலம் தந்துள்ளார் லாவண்யாவின் 2வது கணவர் பிரவீன்குமார்.

வேலூர் சத்துவாச்சாரியை பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா.. 20 வயதான இவர் 21 வயதான சிவசக்திவேல் என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார்.. இவர்களுக்கு 2 வயதில் கலைரஞ்சனி என்ற பெண் குழந்தையும் பிறந்தது..

lockdown crime: youth confessed to vellore police over 2 year old baby murder case

இந்நிலையில், லாவண்யாவை சிவசக்திவேலுக்கு பிடிக்கவில்லை என்பதால், அவரை விட்டு பிரிந்துவிட்டார்.. லாவண்யாவும் குழந்தையை தூக்கி கொண்டு கே.வி.குப்பத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. அங்கு ஒரு இடத்தில் கட்டிட வேலைக்கு போனார்.. அந்த இடத்தில் பழக்கமானவர்தான் பிரவீன்குமார்.. இவருக்கும் 21 வயசுதான்.. பிரவீன்குமாருக்கு கல்யாணம் ஆகவில்லை.. இதனால் லாவண்யாவும் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி அவரை ஏமாற்றி உள்ளார்.

லாவண்யா மீது அதிக பிரியம் கொண்ட பிரவீன்குமார், ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார்.. கல்யாணம் முடிந்ததும் குழந்தையை தூக்கி கொண்டு பிரவீன் வீட்டுக்கு சென்றார் லாவண்யா.. இது யாருடைய குழந்தை என்று கேட்கவும், இது தன்னுடைய அக்கா குழந்தை, என் அக்கா இறந்துட்டாள், அம்மா ஞாபகம் வந்துடக்கூடாதுன்னு நான் தூக்கிட்டு வந்துட்டேன் என்று சொல்லி உள்ளார்.

இதையும் பிரவீன்குமார் நம்பினார்.. ஆனால் தாங்கள் ஜாலியாக இருக்க அந்த குழந்தை தொந்தரவாக இருப்பதாக சொல்லி கொண்டே இருந்தார்.. குழந்தையை உன் அம்மா வீட்டிலேயே விட்டுவிடு என்று பலமுறை சொல்லியும், லாவண்யா அதை கேட்கவில்லை. அதனால் அந்த குழந்தையிடம் எரிச்சலை கொட்டி வந்துளள்ர் பிரவீன்.

இந்நிலையில்தான் சம்பவத்தன்று குழந்தைக்கு திடீரென வலிப்பு வந்து விட்டதாக அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுள்ளனர்.. ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. இதனால் அதிர்ச்சி அடைந்த லாவண்யாவும், பிரவீனும், முதல் கணவர் சிவசக்திவேல் வீட்டுக்கு சென்று, "வலிப்பு வந்து குழந்தை இறந்துடுச்சு.. நீங்களே அடக்கம் பண்ணுங்க" என்று சொல்லி உள்ளனர்.. ஆனால் இதை சிவசக்திவேல் நம்பாமல் சந்தேகம் வந்துள்ளது... அதற்கு பிறகுதான் கேவி குப்பம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்துதான், பிரவீனை போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது பிரவீன் சொன்ன வாக்குமூலம் இதுதான்:

"அந்த குழந்தை எனக்கு பொறக்கல.. என் பொண்டாட்டிக்கு பிறந்தது.. ஆனால் எங்க சந்தோஷத்துக்கு தொந்தரவா இருந்துட்டே இருந்தது.. எத்தனையோ முறை மாமியார் கிட்ட குழந்தையை தர சொல்லியும், லாவண்யா கேட்கல.. அன்னைக்கு நான் தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன்.. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான், அந்த குழந்தையை பார்த்ததும் இன்னும் வெறி அதிகமாயிடுச்சு.

அதான் தூக்கி சுவற்றிலும், தரையிலும் ஓங்கி அடிச்சேன்.. அது பேச்சு மூச்சில்லாமல் விழுந்துடுச்சு.. அப்பவே அது செத்து போச்சுன்னு தெரியும்.. இருந்தாலும் வலிப்பு வந்த மாதிரி நம்ப வைக்க ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போனோம்" என்றார். பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தாலும், வேலூரில் இந்த அதிர்ச்சி இன்னமும் குறையவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+