அமெரிக்காவில் படிப்பு.. கல்வித்தந்தை.. துரைமுருகனின் மகன்.. யார் இந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த்?
வேலூர் : வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
திமுகவில் ஒவ்வொரு லோக்சபா தேர்தலுக்கும் ஒரு சீனியர் நிர்வாகியின் மகன் வேட்பாளராக தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் எப்படி கே.என்.நேருவின் மகன் களமிறக்கப்பட்டாரோ அதேபோல், கடந்த தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்டார். இதனால் வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக மீண்டும் திமுக மீது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் கதிர் ஆனந்த் 33 வயதில் இருந்தே திமுகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின்னரே லோக்சபா தேர்தலில் கதிர் ஆனந்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் படிப்பை நிறைவு செய்த கதிர் ஆனந்த், மேல்படிப்பிற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு பால்ட்வின் கல்லூரியில் சர்வதேச பிஸினஸ் பிரிவில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். அதன்பின் வேலூரில் பிரபலமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியை நடத்தி வந்த கதிர் ஆனந்த், இன்னொரு பக்கம் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இதனையறிந்த திமுக தலைமை 2019ஆம் ஆண்டு முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தது. சீட் கொடுக்கப்பட்ட போது கதிர் ஆனந்த் நெற்றியில் பொட்டு வைக்காமல், மேல் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது பேசுபொருளாகியது.
பின்னர் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலையே ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். இதன்பின் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏசி சண்முகத்தை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார். லோக்சபா தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் என்பது மிகவும் குறைந்த வித்தியாசம் தான்.
இதனால் கதிர் ஆனந்திற்கு மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்தது. ஏனென்றால் உள்ளூர் நிர்வாகிகள் பிரச்சனை, துரைமுருகனுக்கு இருக்கும் செல்வாக்கில் பாதி கூட கதிர் ஆனந்திற்கு இல்லாதது என்று பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் எம்பி-யாக சில சர்ச்சைகளிலில் சிக்கினார்.
ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் துரைமுருகனும், கதிர் ஆனந்தும் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வன்னியர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர் வாக்குகளையும் பெற வேண்டும் என்று தீவிரமாக இருந்தனர். அது தற்போது சரியாக திமுகவின் கதிர் ஆனந்த் பக்கம் வந்துசேர்ந்துள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் பசுபதி மற்றும் பாஜகவின் ஏசி சண்முகத்தை விடவும் 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?











Click it and Unblock the Notifications