வேலூர் பள்ளிகொண்டாவில் காதல் தோல்வி.. எந்த காதலனும் எடுக்கவே கூடாத தவறான முடிவு
வேலூர்: வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் புதுமனை பகுதியை சேர்ந்த கோபி கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் மோனிஷ்க்கு 29 வயது ஆகிறது. இவர் ஒரு பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்தாராம். ஆனால் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க பெற்றோர் திட்டமிட்டனர். ஆனால் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாழ்க்கையில் எடுக்கவே கூடாத தவறான முடிவினை எடுத்தள்ளார்.
காதல் தோல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஆழமான மன ரீதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வலிமிகுந்த அனுபவம் ஆகும். இது உணர்ச்சி ரீதியாக மிகப்பெரிய இழப்பாக கருதுகிறார்கள். அன்புக்குரிய ஒருவரை இழக்கும் துக்கத்தைப் போலவே கருதுகிறார்கள். பிரிவை உருவாக்கிய நபரைத் தொடர்புகொள்ள முயற்சிப்பார்கள். அத்துடன் நிலைமையை மாற்ற எப்படியாவது போராடுவார்கள். சிலர் அப்படியான நிலைகளில் தவறான முடிவெடுப்பார்கள். அதுதான் வேலூர் பள்ளிக்கொண்டாவில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் புதுமனை பகுதியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் மோனிஷ்க்கு 29 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது உறவினர்கள் பெங்களூருவில் உள்ளனர். அங்குள்ள ஒரு பெண்ணை மோனிஷ் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாராம். மோனிஷ் காதலித்து வருவது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தவுடன் அதே பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் மோனிசுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்கிறார்கள். வழக்கம்போல் மோனிஷ் பிராணமங்கலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு நேற்று மாலை சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்த போது மோனிஷ் அங்குள்ள அறையில் தூக்கிட்டார்களாம்.
உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சென்று மோனிஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோனிஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications