18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 20 ஆண்டுகள் சிறை.. வேலூர் நீதிபதி பேச்சு
வேலூர்: 18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடையாத ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட நபர் மற்றும் திருமணம் செய்து வைத்த பெற்றோர், உறவினர்கள் இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் கூறினார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன் வரவேற்றார். பின்னர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குழந்தை திருமணத்துக்கு எதிரான உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து, வேலூர் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் பேசுகையில், "பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதாக கூறினார்கள். தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்கிறார்களா? என்பதை உறுதி செய்வது நம்முடைய கடமையாகும். குறிப்பாக மாணவிகள் உயர்கல்வி பயிலும் பொழுது ஒரு வகையில் குழந்தை திருமணம் தடுக்கப்படுகிறது.
ஒரு சில கிராமப்புற பகுதிகளில் 14 அல்லது 15 வயதிற்குள்ளாகவே பெண் குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. இதுபோன்ற பல்வேறு வழக்குகளை நாங்கள் கையாண்டு வருகிறோம்.
18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடையாத ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட நபர் மற்றும் திருமணம் செய்து வைத்த பெற்றோர், உறவினர்கள் இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து, குழந்தை திருமணத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன், கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், சார்பு நீதிபதி வாசுதேவன், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (சமூக நீதி, மனித உரிமைகள்) ரவீந்திர பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) சிவக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications