வேலூர் விவசாயிகளுக்குக் கடைசி வாய்ப்பு: இன்னும் 3 நாட்களில் இந்த நம்பர் வாங்கலைனா மானியம் கிடைக்காது
வேலூர்: அடையாள எண் பெற இன்னும் 3 நாட்களே உள்ளதால் விவசாயிகள் உடனே செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். எதற்காக இந்த அறிவிப்பு? அதென்ன செயலி? இதனால் கிடைக்கும் நன்மைகள், சலுகைகள் என்னென்ன? அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
விவசாயிகளின் நலன் கருதி, நில உரிமையாளர்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, அவர்களின் பெயரில் உள்ள விவசாய நிலங்களின் நேரடித் தரவுகளைச் சேகரித்து அடையாள எண் வழங்கப்படுகிறது..

இந்த செயல்முறை மூலம் போலியான விண்ணப்பங்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான விவசாயிகளுக்கு அரசு வழங்கும் உதவிகள் நேரடியாகவும், விரைவாகவும் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.. உரங்கள் வாங்குவது முதல் பயிர் காப்பீடு செய்வது வரை அனைத்துக்கும் இந்த அடையாள எண் அவசியமாகிறது..
தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான அறிவிப்புக்கு முக்கியக் காரணம், அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளை முறைகேடுகள் இன்றி விநியோகிப்பதே ஆகும்..
பிரதம மந்திரியின் கவுரவ விவசாய நிதித் திட்டம்
குறிப்பாக பிரதம மந்திரியின் கவுரவ விவசாய நிதித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும், மாநில அரசின் வேளாண் மானியத் திட்டங்களைப் பெறுவதற்கும் இந்த எண் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது.. ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனித்த எண் வழங்கப்படுவதால், அவர்களின் நில விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது..
இந்த அடையாள எண் பெறுவதால் விவசாயிகளுக்குப் பலன் தரக்கூடிய முக்கிய அம்சங்கள் ஏராளமாக உள்ளன.. முக்கியமாக உரங்கள் வாங்கும்போதும், பயிர் காப்பீடு தொடர்பான நடைமுறைகளிலும் இந்த அடையாள எண் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும்..
மேலும், அரசால் வழங்கப்படும் மானிய உதவிகள் அனைத்தும் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க இந்த எண் மிகவும் துணையாக இருக்கிறது.. நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், எதிர்காலத்தில் விவசாயக் கடன்கள் மற்றும் இதர உதவிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் பெருமளவில் குறையும்..
அதனால்தான் விவசாயிகள் அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை தடையின்றிப் பெறுவதற்காக, தங்களது நில ஆவணங்களை அடிப்படையாக கொண்டு தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
இதற்காக நடைபெறும் சிறப்புப் பதிவில் விவசாயிகள் உடனே இணைந்து கொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. இந்த பதிவை மேற்கொள்வதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது..
ஆதார், நிலத்தின் தனிப்பட்டா
பதிவு செய்வதற்கான செயல்முறைகளும் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன.. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், வேளாண்மை உழவர் நல அலுவலர்கள் அல்லது பொது இ-சேவை மையங்களை நேரில் அணுகி அடையாள எண் பெற விண்ணப்பிக்கலாம்.. இதற்காகத் தங்களது நிலத்தின் தனிப்பட்டா நகல், ஆதார் அட்டை, மற்றும் ஆதாரத்துடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றை எடுத்துச் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.. நேரடி பதிவுக்கு வசதியாக சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன..
சில விவசாயிகளிடம் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் இல்லாத சூழல் நிலவுகிறது.. இதை உணர்ந்த வேளாண்மைத் துறை, பேஸ்ஆப் எனும் மேம்பட்ட மென்பொருள் தொழில்நுட்பத்தை முகாம்களில் அறிமுகப்படுத்தியுள்ளது..
தனித்துவ அடையாள எண்
இதன் மூலம் அலைபேசி எண் இல்லாவிட்டாலும், விவசாயிகளின் முகத்தை ஸ்கேன் செய்து அடையாள எண் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.. இதனால் எந்த ஒரு விவசாயியும் இந்தத் திட்டத்தில் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது..
எனவே, இதுவரையிலும் தங்களது தனித்துவ அடையாள எண்ணைப் பதிவு செய்யாத விவசாயிகள், கால அவகாசம் முடிவதற்குள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்..
இதுதவிர, விவசாயிகள் தங்களது அலைபேசியில் 'Farmer Registry TN' என்ற மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.. வேளாண் துறை அதிகாரிகளின் இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
விவசாயிகளுக்கு பலன்
விவசாயிகள் பல்வேறு திட்டங்களில் பயன்பெறும் வகையில் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது பெயரில் விவசாய நிலம் நேரடி தனிபட்டாவாக இருந்து, இதுவரை விவசாய தனித்துவ அடையாள எண் பெறாமல் இருந்தால் உடனடியாக பதிவு செய்து அடையாள எண் பெறலாம்.
இதற்காக அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், தங்கள் பகுதி வேளாண்மை உழவர் நல அலுவலர்கள், பொது இ-சேவை மையங்களை அணுகி, தங்களது நிலத்தின் தனி பட்டா நகல், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இனிமேல் உரங்கள், பயிர் காப்பீடு மற்றும் வேளாண் மானிய திட்டங்கள் பெற விவசாய தனித்துவ அடையாள எண் கட்டாயம்.
வேலூர் மாவட்டம்
இந்நிலையில்தான், அடையாள எண் பெற இன்னும் 3 நாட்களே உள்ளதால் விவசாயிகள் உடனே செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அடையாள எண் பெற இன்னும் 3 நாட்கள் தான் கால அவகாசம் உள்ளதால் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் 'கூகுள் ப்ளே ஸ்டோரில் Farmer Registry TN 'என்ற மொபைல் ஆப் பதிவிறக்கி தாங்களாகவே பதிவு செய்து அடையாள எண் பெறலாம் என்றும் கணியம்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications