எல்லா இடத்திலும் இதே புகார்.. இனி வேற மாதிரி நடவடிக்கை.. அதிகாரியை எச்சரித்த அமைச்சர் பாலாஜி
வேலூர்: தவெக ஆட்சியமைத்து மூன்று மாதங்களாகிவிட்டன. அமைச்சர்கள் பலரும் அரசுதுதுறைகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். ரீல்ஸ் மோகத்தில் ஆய்வு செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். வேலூரில் அமைச்சர் பாலாஜி பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது கழிப்பறை தொடர்பாக மாணவிகள் புகாரளித்தனர். அதற்கு பாலாஜி அதிகாரிகளை அழைத்து, கடுமையாக எச்சரித்தார்.
வேலூர் மாவட்டம் விரிச்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவிகள் கழிப்பறை சுத்தமாக இல்லை என அவரிடம் புகார் கூறினர். அப்போது பாலாஜி, "பி.டி.ஒ எங்க. ஏன் எங்கே போனாலும் டாய்லெட் கம்ப்ளைன்ட் வந்துட்டே இருக்கு. உடனே பாருங்க. இந்த பள்ளியிலும் டாய்லெட் சுத்தமாக இல்லை, சரியாக இல்லை என கூறுகிறார்கள். இதெல்லாம் குழந்தைங்க படிக்கற ஸ்கூல். இதை சுத்த பத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அடுத்தவாட்டி நான் சொல்லாமல் ரகசிய ஆய்வு மேற்கொள்வேன்.
இதே போல இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

விஜய் அண்ணா கவர்ன்மென்ட்
போற வர எல்லா இடங்களிலும் குழந்தைகள் அதைத்தான் புகார் சொல்கிறார்கள். அதுதானே சார் முக்கியம். அதை சுத்தமாக பராமரிப்பது நம் கடமை" என்றார். பிறகு பள்ளி மாணவிகளிடம், "உங்களுக்கு ஏதாவது என்றால் சொல்லுங்கமா. இங்கே அதிகாரிகள், எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எல்லாரும் உதவி செய்வார்கள். இது நம்ம கவர்ன்மென்ட். உங்கள் அண்ணனின் கவர்ன்மென்ட். நீங்கள் என்ன நினைச்சாலும் அது நடக்கும். நீங்கள் சரியாக படிக்கிற வேலையை மட்டும் பார்த்தால் போதும். உங்களுக்கு என்ன தேவையோ அதை விஜய் அண்ணா செஞ்சு கொடுப்பார். நன்றிமா" என்றார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி, "அரசு பள்ளிகளில் பராமரிப்பில்லாத கட்டிடங்களை சரி செய்து வருகிறோம். ரூ. 20 கோடி மதிப்பில் 60 புதிய கட்டிடங்களை கட்டியுள்ளோம். இதன் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு என்னென்ன தேவையோ, அதை ஆலோசனை செய்து மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்ப பட்ஜெட்டுக்கு தயாராக வேண்டும். பழங்குடி மக்களுக்கு சாலை வசதி செய்வது தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
கோ ஆப்டெக்ஸ் ஆய்வு
தண்ணீர், சாலை பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோ ஆப்டெக்ஸில் எப்படி விற்பனை நடக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்படும் பட்சத்தில் புதிய ஷோ ரூம் திறக்கப்படும். அதிகாரிகளுடன் கலந்து பேசி 30 சதவிகிதம் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மாற்று திட்டங்கள் மூலம் விலை குறிப்பது குறித்து ஆலோசனை செய்கிறோம். பாலாற்றை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
