நடிகர் விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளாரே எப்படி பார்க்குறீங்க.. தக் லைஃப் செய்த துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடி குறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் தக் லைஃப் கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் கட்சி தொடங்கலாம். கொடியை அறிமுகப்படுத்தலாம். அந்தக் கொடியை ஏற்றி வைக்கலாம் கூறிய துரைமுருகன், கொடியை பார்ப்பது குறித்து தக்லைப் பதிலை கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடி சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Minister Duraimurugan thug life comment about Vijay s Tamizhaga vetri kazhagam party flag

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி பற்றியும் விஜய்யின் நிகழ்ச்சி பற்றியும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் துரைமுருகன் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்டது முகுந்தராயபுரம் ஊராட்சி. இங்கு 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இந்த முகாம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடந்தது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் உள்பட பல நல்ல பல திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து தொடர்ந்து அதனை செயல்படுத்தி வருகிறார். முதல்வரின் இந்த திட்டங்களுக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் 'தமிழ் புதல்வன்' என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார். இதேபோல் முதல்வர் செயல்படுத்தியுள்ள மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் தான் எனக்கு மிகவும் பிடித்த திட்டமாகும். இதை நானே முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். இந்த திட்டத்தை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதையடுத்து, செய்தியாளர்கள் சந்தித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் "கலைஞர் நாணயம் வெளியிட்டது எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பாக அதிமுக கூறுகிறது. அதிமுகவினருக்கு என்ன தெரியுமோ அதை அவர்கள் சொல்கிறார்கள்" என்றார்.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள், 'இது ஜனநாயகம் நாடு. இந்த நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கவும், கொடியை அறிமுகப்படுத்தவும், அந்தக் கொடியை ஏற்றவும் உரிமை உண்டு' என்றார்.

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர் ஒருவர், நடிகர் விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்திருக்கிறார். அதனை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு துரைமுருகன் பறக்கும் போது பார்ப்பேன் என்று பதில் அளித்தார். பொதுவாக தக்லைப் பதில் அளிப்பதில் துரைமுருகன் வல்லவர். எதிர்க்கட்சி என்று இல்லை, சொந்த கட்சியினரையே சில நேரங்களில் கலாய்த்து தான் தக்லைப் பதில் அளிப்பார். அப்படித்தான் விஜய் குறித்த அவர் பதில் அளித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் யூடியூபர் ஹர்சா சாய்க்கு இதே பாணியில் நேற்று பதில் அளித்துள்ளார். ஏழைகளுக்கு உதவி செய்து அதற்கான வீடியோவை யூடியூபில் பதிவு செய்து வருகிறார் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய். இவர் சமீபத்தில் விவசாயி ஒருவருக்கு 1 ஏக்கர் நிலம் கொடுத்து உதவி செய்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவேகமாக பரவிய நிலையில , பலரும் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் என்பது போல கமெண்ட்ஸ் அடித்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அமைச்சர் துரைமுருகன் "அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா" என நகைச்சுவையாக கமெண்ட் செய்தார். இதுவும் நேற்று டிரெண்டானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+