அமைச்சர் ஆர் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு.. வேலூர் மருத்துவமனையில் அனுமதி - சிகிச்சை
வேலூர்: தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சர் ஆர் காந்தி திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் ஆர் காந்தி. இவர் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் அமைச்சர் ஆர் காந்தி திடீரென்று வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அமைச்சர் ஆர் காந்திக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அவர் தற்போது நலமாக இருக்கிறார். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும் அமைச்சர் ஆர் காந்தி எந்த மாதிரியான உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டார்? என்பது தெரியவில்லை.
அமைச்சர் ஆர் காந்தி திமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். ராணிப்பேட்டை சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 1996, 2006, 2011, 2016, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications