ஆட்சியை கலைக்க நினைத்தால் தூக்கிபோட்டு மிதித்துவிடுவோம்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை
வேலூர்: அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? என்றும் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சித்தால் அவரை பந்து மாதிரி தூக்கி போட்டு மிதித்துவிடுவோம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
வேலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேவி குப்பம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "அதிமுக என்பது மனிதர் ஆரம்பித்த கட்சி இல்லை, புனிதர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. மேலும் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வென்றது. இதில் 13 என்பது பேய்களின் நம்பர், 9 என்பது நவ ரத்னங்கள் எனவே நவரத்னங்களை பெற்றுள்றோம்.
அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? கர்நாடகாவைப் போல் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சித்தால் அவரை பந்து மாதிரி தூக்கி போட்டு மிதித்துவிடுவோம். அவரை அரசியலை விட்டே வெளியேற்ற முடியும்.
திமுக மட்டும் தான் ரவுடி கட்சியா? நாங்களும் எல்லாவற்றையும் பார்த்துதான் வந்துருக்கோம், எந்த வேலையும் செய்வோம்" இவ்வாறு ஆவேசமாக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications