மோடி தான் மீண்டும் பிரதமர்.. குஷ்புக்கு பதிலாக பிரசாரத்தில் இறங்கிய நடிகர் சுந்தர் சி
வேலூர்: வேலூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ சி சண்முகத்திற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு நடிகர் சுந்தர் சி பிரசாரம் செய்தார். அப்போது அவர், 'வேலூர் நல்ல வளர்ச்சி பெற வேண்டுமென்றால் தாமரைக்கு வாக்களியுங்கள். மீண்டும் மத்தியில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்வார்' என்றார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏசி சண்முகத்தை ஆதரித்து நடிகரும் பாஜக நிர்வாகியான குஷ்புவின் கணவருமான சுந்தர் சி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் சுந்தர் சி இன்று சங்கரன்பாளையம், பாகாயம், மண்டிவீதி சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மண்டி வீதியில் திரைப்பட இயக்குநர் நடிகருமான சுந்தர் சி பிரச்சாரம் செய்தார்.
அப்போது சுந்தர் சி பேசுகையில், ஏ.சி. சண்முகம் நல்ல வேட்பாளர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை பிறவியிலேயே வர வேண்டும். அது வெகு சிலருக்கு தான் வரும். அது நமது புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாதிரி. அவருடைய வழித்தோன்றலாக ஏசி சண்முகம். பதவியில் இல்லாத போதே ஏராளமான நன்மைகள் செயதுள்ளார்.
கிட்டத்தட்ட 500 மெடிக்கல் கேம்ப். 2 லட்சம் பயனாளிகள். நூற்றுக்கணக்கான பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவியிருக்கிறார். அவர் மக்களுக்காக மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். என்னற்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளார். கையில் அதிகாரம் இல்லாத போதே மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். எனவே அதிகாரம் வந்தால் அவர் இன்னும் மக்களுக்கு பல நன்மைகளை செய்வார்.
எத்தனையோ நடிகர்களுடன் நான் வேலை செய்திருக்கிறேன். எனினும் ஏசி சண்முகம் மக்களுக்கு நல்ல உதவி செய்பவர். இதனால் தான் நானே அவருக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். ஒரு நாள் ஏசி சண்முகத்திடன் நான் கேட்டேன். சொத்து இருக்கு சும்மா இருந்து சாப்பிட வேண்டியதானே.. ஏன் அரசியலில் இருக்கிறார் என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன சொன்னார் என்றால்,
"என்ன தான் கோடி கோடியா பணம் இருந்தாலும், நம்ம கையாள உதவி செய்யும் போது அந்த மக்கள் நன்றி சொல்லும்போது அதை நாம் நேரில் பார்ப்பது யாருக்கு கிடைக்கும்" என்று சொன்னார். இதனால் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். வேலூர் நல்ல வளர்ச்சி பெற வேண்டுமென்றால் தாமரைக்கு வாக்களியுங்கள். மீண்டும் மத்தியில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்வார். ஆகவே ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களியுங்கள்" என்றார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கமிட்டி உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு, லோக்சபா தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், கடந்த வாரம், திடீரென பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி கொள்வதாக நடிகை குஷ்பு அறிவித்தார். இதுதொடர்பாக அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது:-
நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சனைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன். 2019ல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு வாலெலும்பு (tailbone-முதுகின் கீழ்பகுதியில் உள்ள எலும்பு) முறிவு ஏற்பட்டது.
இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன். பிரசாரம் என்பது நீண்ட பயணங்கள், நீண்டநேரம் அமர்ந்து இருப்பது உள்ளிட்டவற்றை கொண்டாக இருக்கும். இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது.
இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அதேவளையில் முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற ஆழ்ந்த மனவருத்தம் உள்ளது. இருப்பினும் எனது வலைதள பக்கங்கள் மூலம் பாஜகவின் கொள்கை, செயல்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதன் மூலம் தொடர்ந்து பிரசாரத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பேன்.
உங்களின் ஊக்கம் வலுவாக நான் திரும்பி வருவதற்கான முயற்சிக்கு வலு சேர்க்கிறது. நான் குணமடைந்து விரைவில் திரும்பி வருவேன். மேலும் நம் பிரதமர் தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்'' எனக் கூறியிருந்தார். லோக்சபா தேர்தலில் குஷ்பு பிரசாரத்தில் இருந்து திடீரென விலகிய நிலையில், அவரது கணவர் சுந்தர் சி தற்போது பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications