முடிவெட்டியதற்கு பணம் தராத வடமாநில இளைஞர்.. கழுத்தறுத்த சலூன் கடைக்காரர்.. வேலூரில் பயங்கரம்
வேலூர்: முடி வெட்டிவிட்டு பணம் இல்லை எனக் கூறிய வட மாநில இளைஞரை சலூன் கடைக்காரர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் வணிக வளாகம் அருகே கடந்த 22-ம் தேதி இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு உடனடியாக வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழுத்தறுக்கப்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருந்ததால் அந்த இளைஞரால் பேச முடியவில்லை.

வேலூர்
இதையடுத்து, அவரிடம் இருந்த ஆதார் அட்டையை பார்த்த போது அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அபனி சரணியா (34) என்பது தெரியவந்தது. இதனிடையே, அந்த நபர் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ம் தேதி உயிரிழந்தார். அபனி சரணியா ஏன் வேலூர் வந்தார், அவரை யார் கொலை செய்தது என்பது மர்மமாக இருந்தது. இதுகுறித்து விருத்தம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பெரிய அளவில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

என்ன நடந்தது?
இதையடுத்து, அசாம் மாநிலத்தவர் என்பதால் அவர் ரயில் மூலமாக தான் காட்பாடி வந்திருக்க வேண்டும் எனக் கருதிய போலீஸார், ரயில் நிலையத்தில் அருகில் இருந்த கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 22-ம் தேதி காலை காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்திருக்கிறார். இதனை பார்த்த போலீஸார் அடுத்தடுத்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தனர். அப்போது அங்குள்ள சலூன் கடைக்குள் அபனி சரணியா சென்றுள்ளார்.

துப்பு கிடைக்கவில்லை
ஆனால் அரைமணி நேரத்துக்கு பிறகு அவர் வெளியே ஓடி வந்திருக்கிறார். அதற்கு பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக, அந்த சலூன் கடைக்கு போலீஸார் நேற்று முன்தினம் சென்றனர். அப்போது கடையின் உரிமையாளர் விஜயராகவன் (26) என்பவரிடம் அசாம் இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, விஜயராகவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அபனி சரணியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். போலீஸாரிடம் அவர் கூறியதாவது:

கைது
சம்பவ தினத்தன்று காலையில் முதல் ஆளாக அபனி சரணியா எனது கடைக்கு வந்தார். அவருக்கு முடிதிருத்தம் செய்துவிட்டேன். அதன் பிறகு அவரிடம் பணம் கேட்ட போது, பணம் இல்லை என்பது போல சைகையில் கூறினார். அவர் பேசும் மொழி எனக்கு புரியாததால் பணத்தை தருமாறு அவரிடம் கறாராக கேட்டேன். அப்போது என்னை அவர் கீழே தள்ளிவிட்டார். இதனால் ஆத்திரத்தில் கையில் இருந்த சவரக் கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்தேன். இதையடுத்து அவர் வெளியே ஓடிவிட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதன் அடிப்படையில் போலீஸார் விஜயராகவனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications