பேரணாம்பட்டு அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவிகள் இருவர் மாயம்! சென்னையில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இரு மாணவிகள் மாயமான நிலையில் அவர்களை சென்னையில் காவல் துறையினர் மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

vellore crime

இந்தப் பள்ளியில் பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி. பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பவில்லையாம். சிறிதுநேரம் காத்திருந்த நிலையில் அப்போதும் மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே மகளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சக தோழியான சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது தனது மகளையும் காணவில்லை என தெரிவித்தாராம்.

இதனால் தூக்கி வாரி போட்டு பள்ளி நிர்வாகத்திற்கு போன் செய்த போது இரு மாணவிகளும் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனராம். அதில் ஒரு மாணவி வீட்டில் இருந்த செல்போனையும் எடுத்துச் சென்றுவிட்டாராம்.

ஒரே நேரத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் 2 பேர் மாயமானதால் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணாத நிலையில். இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் பேர்ணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி எடுத்து சென்றுள்ள செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக தேடினர். இந்த நிலையில் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் இரண்டு மாணவிகளும் சென்னையில் மீட்டு பேர்ணாம்பட்டுக்கு அழைத்து வந்தனர்.

ஏற்கெனவே செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போய் 20 நாட்கள் ஆன நிலையில் இதுவரை அவர் கிடைக்கவில்லை. சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் ஸ்ரீபெரும்புதூரிலும் 8 வயது சிறுமி காணவில்லை.

அண்மையில் ஊத்தங்கரையில் மாணவர் ஒருவர் டியூஷன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னை சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவனை போலீஸார் மீட்டு ஊத்தங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிறுவனிடம் விசாரித்த போது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டதாக தெரிவித்தானாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+