சூடு பிடிக்கும் வேலூர் களம்.. ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு
வேலூர்: அனுமதி பெறாமல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் தொகுதி தேர்தல் அனல் பறக்கிறது. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஸ்டார் வேட்பாளர்களாக அறியப்படுகிறார்கள்.

ஏற்கனவே பொதுத் தேர்தலின்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணப் பட்டுவாடா அத்துமீறிப் போன புகாரில் இத்தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நிலையில், பாதுகாப்பு கெடுபிடிகள் இம்முறை மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக, திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக அதிமுகவினர் சார்பில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதை உறுதி செய்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு











Click it and Unblock the Notifications