வேலூரில் தூய்மைப் பணியாளரை வேண்டுமென்றே இடித்து தள்ளிய நபர்.. இரக்கமே இல்லாமல் அடுத்து செய்தது?
வேலூர்: வேலூரில் தூய்மைப்பணியாளரை வேண்டுமென்றே இடித்து தள்ளிவிட்டு ஸ்கூட்டியில் அலட்சியமாக சென்றவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனிடையே தூய்மை பணியாளரை தள்ளிவிட்ட சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிலர் தெரியாமல் போய் யார் மீதாவது மோதி விபத்தை ஏற்படுத்துவார்கள்.. சிலர் அலட்சியத்துடன் சென்று திடீரென விபத்தில் சிக்குவார்கள்... ஆனால் சிலர் வேண்டுமென்றே மோதி விபத்துக்களை ஏற்படுத்துவார்கள்.. மற்ற இரண்டையும் விட மோசமானது வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதுதான். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்.. அப்படி ஒரு சம்பவம் தான் வேலூரில் நடந்துள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி மந்தவெளி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே விஜயலட்சுமி என்ற பெண் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அப்பெண் மீது வேண்டுமென்றே மோதியதில் தூய்மைப் பணியாளர் விஜயலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.
இதனால், விஜயலட்சுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இது தொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் குறிப்பிட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாக வந்து வேண்டுமென்றே மோதியதில், அந்தப் பெண்மணி தூக்கி வீசப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த குறிப்பிட்ட நபர், வாகனத்தை வைத்து இடித்ததோடு மட்டுமில்லாமல் கீழே விழுந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்று கூட கண்டுகொள்ளாமல் அலட்சியமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனையடுத்து தூய்மைப்பணியாளர் கூச்சல் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து கால் முறிவு ஏற்பட்ட விஜயலட்சுமியை மீட்டு, முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை இடித்துச் சென்ற நபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications