தவெக அரசுக்கு தலைவலியாகும் மின்வெட்டு.. செங்கோட்டையன் பேட்டியின் போதே பவர் கட்.. நிர்வாகிகள் அப்செட்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டதால் தவெகவினர் அப்செட் ஆகினர். தொடர்ந்து செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்த நிலையில் சிறிது நேரத்தில் மின்சாரம் மீண்டும் வரவே அங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். தமிழகம் முழுக்க மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அமைச்சர் பேட்டி அளிக்கும்போதே மின் தடை ஏற்பட்ட காட்சிகள் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மக்கள் தூக்கத்தை தொலைத்து கடும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். தலைநகர் சென்னையிலும் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. நேற்று சென்னை அமைந்தகரையில் சுமார் 8 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பரிதவித்து போயினர்.

Power cut become headache for the TVK Govt power outage during Minister Sengottaiyan interview

தொடர் மின் வெட்டு

மின் அழுத்த கம்பி எரிந்ததால், மின் தடை ஏற்பட்டதாக மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதுமே ஆங்காங்கே மின் தடை ஏற்படுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த மின் துறை அமைசர் நிர்மல் குமார் காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், மின்பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், தமிழ்நாடு மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

மின் தடையை சமாளிக்க கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் அளித்தார். அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்த போதிலும் மின் தடை பிரச்சினை நீடிக்கவே செய்வதாக பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாக புகாரளித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், வேலூரில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

செங்கோட்டையன் பேசும்போதே பவர் கட்

அமைச்சர் பேட்டி கொண்டு இருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், ஒரு நொடி அமைச்சர் செங்கோட்டையன் முகம் மாறினார். எனினும், செல்போன் வெளிச்சத்தில் பேட்டி தொடர்ந்த நிலையில், சிறிது நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் திருச்செந்தூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். திருமாவளவன் மேடையேறியதும் மின் வெட்டு ஏற்பட்டது. 5 நிமிடத்திற்கும் மேல் மின்சாரம் தடை பட்டதால், நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிகவினர் அப்செட் ஆகினர். தொடர்ந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், திருமாவளவன் அங்கிருந்து விரைவாக புறப்பட்டு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+