அதிமுக பொதுச்செயலாளராகி சசிகலா முதல்வராக வேண்டும்... அமமுக தொண்டர்களின் விருப்பம் இதுதான்
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் அவர் 2021ஆம் ஆண்டு முதல்வராவது உறுதி என்றும் அமமுக தொண்டர்கள் கூறியுள்ளனர்.
வேலூர்: அம்மா ஜெயலலிதா உடன் 33 ஆண்டு காலம் தவ வாழ்க்கை வாழ்ந்தவர் தியாகத்தலைவி சின்னம்மா. அவர் அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும். 2021ஆம் ஆண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவேண்டும் என்று அமமுக தொண்டர்கள் கூறியுள்ளனர்.
சிறை தண்டனை காலம் முடிந்து விடுதலையான சசிகலா இன்று தமிழகம் திரும்புகிறார். பெங்களூருவில் இருந்தே சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
செண்டை மேளம் முழங்க, ஆரத்தி எடுத்தும் பூரண கும்பங்களை வைத்தும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும் கொடுக்கப்படும் வரவேற்பில் தமிழக கர்நாடக எல்லைப் பகுதி அதிர்ந்து போய் காணப்படுகிறது.

சசிகலாவிற்கு வரவேற்பு
சசிகலாவின் வருகையை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் அமமுகவினர். ஆங்காங்கே அதிமுக கொடியும் இணைந்து பறக்கின்றன. பூ மழை தூவி வரவேற்கும் தொண்டர்கள் சசிகலாவின் வருகையை எப்படி பார்க்கின்றனர் என்று சிலரிடம் கேட்டோம்.

முதல்வராக வேண்டும்
அமமுக தொண்டர்களுக்கு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அம்மாவின் மறு உருவம்
தற்போது முதல்வராக, அமைச்சராக உள்ள அனைவரும் சசிகலாவினால் உருவாக்கப்பட்டவர்கள். சசிகலா முதல்வராக வேண்டும்
33 ஆண்டு காலம் ஜெயலலிதா உடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பேராண்மை சசிகலா
அம்மாவின் நிழல் சசிகலா..சசிகலா என்றால் பேராண்மை, ஆளுமை, அந்த ஆணவம், திமிர் எங்களுக்கும் இருக்கும் என்று கூறியுள்ளனர் மகளிரணியைச் சேர்ந்த அமமுக தொண்டர்கள். தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி என்றும் கூறியுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்












Click it and Unblock the Notifications