தோழிகளுடன் டாய்லெட் போன பூவிகா!.. சிறுமியை பாம்பு கடித்ததால் பரபரப்பு.. எப்படி இருக்கிறார்?
வேலூர்: அரசு பள்ளி மாணவிக்கு பாம்பு கடித்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழிப்பறையில் இருந்த பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒலக்காசியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சிவஞானம் என்பவரது மகள் பூவிகா (12) 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் இன்று காலை பள்ளிக்குச் சென்றார். அங்கு பிரார்த்தனை முடிந்ததும் பூமிகா மற்றும் அவருடைய 3 தோழிகள் கழிப்பறைக்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு பாம்பு இருந்தது. அது பூவிகாவை கடித்தது.

இதனால் பூவிகா அலறிய நிலையில் உடன் இருந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அப்போது பூவிகாவிடம் ஆசிரியர்கள் கேட்ட போது சிறிய பாம்பு கடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிறுமிக்கு குறைந்த அளவிலான விஷமே உள்ளே சென்றுள்ளது. இதனால் அவருக்கு விஷ முறிவு மருந்தை கொடுத்தனர். பின்னர் அந்த சிறுமியை 6 மணி நேரம் கண்காணிப்பில் வைத்திருந்தனர். அந்த 6 மணி நேரத்தில் சிறுமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததை அடுத்து அவருக்கு ஆபத்து ஏதும் இல்லை என கூறிவிட்டனர்.
பாம்பு உள்ளேயே இருந்ததா இல்லை வெளியில் இருந்து வந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு பள்ளியையும் சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அப்படியிருக்கும் நிலையில் அந்த பள்ளி கழிப்பறையில் பாம்பு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தது.
பள்ளிகள் திறக்கப்பட்டு கிட்டதட்ட ஒரு மாதம் ஆகியிருந்தாலும் தினந்தோறும் கழிப்பறையை சுத்தப்படுத்தவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளி மாணவியை பாம்பு கடித்த சம்பவம் மற்ற பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு பிடிக்கப்பட்டது.
மேலும் சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் கழிப்பறைகள், வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை கற்றுக் கொடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications