வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள்... வீதி, வீதியாக தீவிரப் பிரச்சாரம்
வேலூர் : வேலூர் மக்களவை தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள், அதிமுக வேட்பாளரை ஆதரித்து வீதி, வீதியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணி செய்ய அதிமுக தலைமை பணிக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் ஆலோசனை கூட்டம்,குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, சோதனையில் இருந்து வெற்றி பெறவே, அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக கூறினார். இதனிடையே, குடியாத்தம் நகர பகுதிகளில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
கட்சிக்கு வந்துள்ள சோதனையில் இருந்து வெற்றி பெறவே அமைச்சர்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.
அதே போல், வாணியம் பாடியில் வீதி வீதியாக சென்று ஏ .சி சண்முகத்துக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் .பி உதயகுமார் ஆதரவு திரட்டினார் அப்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், பொய் சொல்வதிலே திமுகவினர் வல்லவர்கள் என புகார் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications