வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது ராகுல் பிரதமர் வேட்பாளரா?.. அப்ப மோடி பிரதமர் ஆவது கன்பார்ம்!.. அடித்து சொல்லும் தமிழிசை

Google Oneindia Tamil News

வேலூர்: ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டால் நிச்சயம் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகளால் கலங்கியுள்ள பாஜக தற்போது புதிய வியூகம் வகுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்பு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். அதன் படி வேலூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உள்ள திரையில் தோன்றி மோடி பல்வேறு விஷயங்களை பேசினார்.

5 நாடாளுமன்ற தொகுதிகள்

5 நாடாளுமன்ற தொகுதிகள்

இதுகுறித்து வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் மோடி வரும் 23 தேதி 5 நாடாளுமன்ற தொகுதிகளில் பேசுவார்.

முன்மொழிந்த

முன்மொழிந்த

பாஜக தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. தி.மு.க பலமான கூட்டணி அமைத்தது போல சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். என்ன தான் ஸ்டாலின் ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தாலும் 2019-ல் மோடிதான் பிரதமர் ஆவார்.

மக்கள் நலன்

மக்கள் நலன்

தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை விட மோடி எதிர்ப்பு அரசியல் தான் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டதர்க்கு எந்த எதிர்க்கட்சியும் வாழ்த்து செல்லவில்லை. ராகுலை பிரதமராக முன்னிறுத்தினால். நிச்சயம் தோல்வி தான் கிடைக்கும். இதனால் மோடி மேலும் பலம் பொருந்தியவர் ஆவார். கும்பகரண தூக்கமாக காங்கிரஸ் கட்சி தூங்கிவிட்டு இப்போதோ மோடியை தூங்கவிட மாட்டார் என்கிறார் ராகுல்.

துயர்துடைத்து

துயர்துடைத்து

மோடி மக்களுக்காக தூங்காமல் இருக்கிறார். ராகுல் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். ராகுலே கனவு காணாதீர்கள். கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசியது குறித்து ஸ்டாலின் மோடிகிட்ட மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து தானே கஜா துயர் துடைத்து வருகிறோம்.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுபயணம் செய்ததோடு சரி.
பிரதமர் மோடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 டிவிட்டர் பதிவுகள் மூலம் வருத்தம் தெரிவித்தார். ஆனால் ஸ்டாலின் இதற்கு மாறாக பேசி வருகிறார். 20 தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் தெரிவிப்போம்.
பொன்.மாணிக்கவேலுவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

வழி வகுத்தது

வழி வகுத்தது

இந்து இயக்க தலைவர்களுக்கு இங்கு எதிர்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அங்கு அரசியல் செய்ய மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது. விளம்பர பேனரை அறிமுகம் பயன்படுத்தியவர்கள் தி.மு.க தான். மோசமான அத்தனை கலாச்சாரத்திற்கும் வழி வகுத்தது தி.மு.க தான் என்றார் தமிழிசை.

English summary
BJP State President Tamilisai Soundararajan says that Modi will become PM in 2019 also.She also criticises Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X