ஆம்பூரில் கோதுமை நாகப்பாம்பு.. அதன் வாய்க்குள் எட்டிப் பார்த்தால் "குருவி".. ஆடிப் போன திருப்பத்தூர்
திருப்பத்தூர்: தற்போது குளிர்காலம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் தலைதூக்கி உள்ளது.. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்துவிடுவது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.. இதனால் பொதுமக்கள் அச்சத்துக்கும், கலக்கத்துக்கும் ஆளாகி வருகிறார்கள்.. இதற்கு திருப்பத்தூர் மாவட்டமும் விதிவிலக்கல்ல.. இன்றைய தினம் அங்கு என்ன நடந்தது தெரியுமா?
குளிரும், பனியும் அடர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பாம்புகள் வருகை ஊருக்குள் பெருகி வருகிறது.. சமீபத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாம்பு நுழைந்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவிட்டது..

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே 2 அடி நீளம் உள்ள தண்ணீர் பாம்பு பதுங்கி இருந்தது.. இதனை அங்கு பணியில் இருந்த துப்புரவு பணியாளர்கள் பார்த்து அச்சமடைந்து அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தந்துள்ளார்கள்..
பிறகுதான் மீட்பு குழுவினர் விரைந்து வந்து, இடுக்கி வைத்து பதுங்கி இருந்த தண்ணீர் பாம்பை லாவகமாக மீட்டனர்.. பிணவறை அருகே 2 அடி நீளம் உள்ள பாம்பு பதுங்கியிருந்தது, காண்போரை கதிகலங்க வைத்தது.
ஆம்பூரில் கோதுமை நாகப்பாம்பு
அதேபோல சில நாட்களுக்கு முன்பு, ஆம்பூரில் முனியம்மா என்ற பெண்மணி வீட்டில் 7 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு புகுந்துவிட்டது..
கோதுமை நாகப்பாம்பு (Wheat Cobra) என்பது, ஒரு வகை நல்ல பாம்பு (Cobra) ஆகும், இது கோதுமை தானியம் போன்ற புள்ளிகளை கொண்டிருக்கும், இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.. இந்தவகை பாம்புதான், முனியம்மா வீட்டுக்குள் புகுந்துவிட்டது.. அந்த வீட்டிற்குள்ளேயே படம் எடுத்து சுற்றி வந்துள்ளது..
பாம்பை கண்டதுமே முனியம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார்.. ஆனால் உதவிக்கு யாரையும் அழைக்காமல், பாம்பையும் வெளியே விரட்டாமல் இருந்துள்ளார்.. இப்படியே 3 நாட்கள் பாம்புடன் அதே வீட்டில் தங்கி தூங்கி வந்துள்ளார்..
4வது நாள்தான் பக்கத்து வீட்டாரிடம் பாம்பு வீட்டிற்குள் இருப்பதை முனியம்மா சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு, வனத்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து, பாம்பை பிடிக்க முயன்றனர்.. அப்போது அந்த பாம்பு படமெடுத்து ஆடியிருக்கிறது..
கற்பூரம் ஏற்றி வழிபட்ட முனியம்மா
உடனே இதைப்பார்த்த முனியம்மா, அந்த நாகப்பாம்பிற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.. நாகராஜா, ஏன் என்னை இப்படி பயமுறுத்துகிறாய்? எங்கேயாவது கண் தெரியாத இடத்திற்கு போ என்று கை கூப்பி வழிபட்டார். அதற்கு பிறகு வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து சென்றது நினைவிருக்கலாம்.
இதோ இப்போது மீண்டும் ஒரு நாகப்பாம்பு ஆம்பூரில் வட்டமடித்துள்ளது.. ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார் மனோகரன்.. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இன்று சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்துள்ளது.. பார்ப்பதற்கு கோதுமை நாகப்பாம்பு போலவே இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
குருவியை விழுங்கிய பாம்பு
இந்த நாகப்பாம்பு, குருவியை விழுங்கி விட்டு நிலத்தில் உள்ள மரத்தின் கீழே இருந்துள்ளது... இதனை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடிவந்துள்ளனர்.. பிறகு வனத்துறையினருக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து நாகப்பாம்பை பிடிக்க முயன்றனர்..
ஆனால், எளிதில் அதனை பிடிக்கமுடியாமல் சற்று திணறி உள்ளனர்.. நீண்ட நேரம் போராடியே, லாவகமாக பிடித்து அதனை பைக்குள் போட்டு எடுத்து கொண்டு அங்குள்ள காப்பு காட்டில் விட்டனர்... வனத்துறையினர் நாகப்பாம்பை பிடித்த காட்சி இணையத்திலும் வெளியாகி காண்போரை நடுங்க வைத்துள்ளது..
ஆம்பூரில் இப்படி தொடர்ந்து நாகப்பாம்புகள் வட்டமிட்டு வருவது அங்குள்ள மக்களை கதிகலங்க செய்து வருகிறது..!!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications