வேலூரில் 2வதுமுறையாக ஓடிப்போன கணவன்.. மனைவி செய்த காரியத்தை பாருங்க
வேலூர்: வேலூரில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண்ணுடன் கணவர் ஓட்டம் பிடித்தார். இதனால் இளம் பெண், தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கைக்குழந்தையுடன் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 22 வயதாகும் இளம்பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் மீனாவின் கணவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுடன் அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்று விட்டாராம்.

இதுகுறித்து இளம்பெண் மீனா கடந்த டிசம்பர் மாதம் காட்பாடி அடுத்த பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தாராம். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவரை அழைத்து வந்து சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மறுபடியும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அந்த பெண்ணுடன் கணவர் ஓடிப்போய்விட்டாராம். இதுபற்றி பொன்னை போலீஸ் நிலையத்தில் அந்தப்பெண் தனது குழந்தையுடன் புகார் அளிக்க சென்றுள்ளார். அவரை காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி கைக்குழந்தையுடன் அவர் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறி அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்களாம். இதனால் நொந்தபோன இளம்பெண் மீனா, கைக்குழந்தையுடன் நேற்று மாலை பொன்னை போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க போயிருக்கிறார். அப்போது போலீசார் இதனை நாங்கள் ஏற்க முடியாது, அனைத்து மகளிர் போலீஸ் மூலம் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்களாம்.
கைக்குழந்தையுடன் காலை முதல் மாலை வரை பொன்னை, காட்பாடி என மாறி மாறி அலைந்த இளம் பெண், தன் கணவர் விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டு வீட்டிற்கே சென்றுவிட்டார். ஒரு பக்கம் கணவன் தன்னை விட்டு சென்றுவிட்ட நிலையில், கைகுழந்தையுடன் காவல் நிலையத்திற்கு மாறி மாறி அலைந்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications