சசிகலாவுக்கே துரோகம் செய்தவர்கள்.. தமிழ்நாட்டுக்கு செய்யமாட்டார்களா.. மு.க. ஸ்டாலின் விளாசல்
வேலூர்: ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கே துரோகம் செய்தவர்கள் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார் .
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றும், நாங்கள் யாருடைய மிரட்டலையும் கண்டு அஞ்சமாட்டோம்; தி.மு.க. பனங்காட்டு நரி; சலசலப்புக்கு அஞ்சாது எனவும் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்டும் அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கிய பா.ஜ.க.வுடன் தான் அ.தி.மு.க. கூட்டு வைத்துள்ளது என்று விமர்சனம் செய்தார்.
மோடியை போன்று ஒரு மோசமான பிரதமரை இந்தியாவில் யாரும் பார்த்திருக்க மாட்டோம் என்று கூறிய மு. க. ஸ்டாலின், அண்மையில் பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால் இந்தியா முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் மோடியின் சர்வாதிகார ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடியின் எடுபிடி ஆட்சியையும் நீக்க வேண்டும் என்றும் பேசினார்.
இதற்கிடையே, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், என் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது பற்றி பேரவையில் முதல்வர் பழனிசாமி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
என் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையை, திமுக மீது நடத்தப்பட்ட சோதனையாகவே மக்கள் நினைத்தார்கள் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications