தோண்டத் தோண்ட நெற்றி பொட்டு சைஸில் திருப்பத்தூர் மண்ணில் தங்கம்! உலோக தங்க காசுகளால் ஆடிப்போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூரில் விவசாய நிலத்தை இயந்திரம் வைத்து சமன் செய்யும் பணியின்போது, தங்கக் காசுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை நேற்று முதல் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.. மேலும் தங்க நாணயங்கள் கிடைத்தது தொடர்பான விசாரணையும் விரிவடைந்துள்ளன.. உண்மையிலேயே என்ன நடந்தது திருப்பத்தூரில்?

திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை ஜேசிபி இயந்திரம் வைத்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.. அப்போதுதான் ஒரு குடுவையில் தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. 86 தங்க நாணயங்கள் கிடைத்த பிறகும்கூட அதிகாரிகளிடம் ஆதவன் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.

Tirupattur golden coins Gold fortune

எனினும் தகவலறிந்து வந்த விஏஓ விசாரணை நடத்தி வருகிறார்.. 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றி உள்ளார்.. உண்மையிலேயே என்ன நடந்தது?

திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆதவன் என்பவருக்கு 55 வயதாகிறது.. இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது..

அந்த நிலத்தில் அதிகளவில் கற்கள் இருந்து வந்ததால், அதனை சமன் செய்ய முடிவு செய்தார். இதற்காக, கடந்த 22ம் தேதி பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டார்...

திருப்பத்தூர் மண்ணில் தோண்ட தோண்ட

சம்பவத்தன்று நிலத்தில் பள்ளம் தோண்டும் பணி நடந்தபோது பழங்கால சிறிய குடுவை கிடைத்துள்ளது.. பூமிக்கு அடியில் எது கிடைத்தாலும் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.. ஆனால், ஆதவன் குடும்பத்தினர் அந்த குடுவையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக மூடியை உடைத்துள்ளனர்.. பிறகு உள்ளே பார்த்தபோது தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சுந்தரம்பள்ளி விஏஒ மற்றும் கந்திலி போலீஸாருக்கு தங்க புதையல் குறித்து ஆதவன் குடும்பத்தினர் நேற்று தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸாரும், வருவாய் துறையினரும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குடுவையில் தங்க நாணயங்கள்

வட்டாட்சியர் நவநீதனிடம் தங்க நாணயங்கள் அடங்கிய குடுவையை ஆதவன் குடும்பத்தினர் ஒப்படைத்தனர். அந்த குடுவையில் 84 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.

ஆனால், ஆதவன் நிலத்தை சமன் செய்தது கடந்த 22-ம் தேதியாகும்.. அன்றைய தினமே புதையல் கிடைத்துள்ளது.. தங்க காசுகள் கிடைத்து ஒரு வார காலம் காலதாமதமாக போலீசுக்கு ஆதவன் தகவல் தெரிவித்துள்ளதால், ஆதவன் மீது வருவாய் துறையினருக்கு சந்தேகம் திரும்பி உள்ளது..

நெற்றி பொட்டு சைஸில் தங்க காசுகள்

மேலும், குடுவையின் மூடி உடைந்திருப்பதும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து கந்திலி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் முருகன், நிலத்தின் உரிமையாளர் ஆதவன் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருவாய்த் துறையினர் குடுவையில் உள்ள சிறிய தங்க நாணயங்களை எண்ணிப் பார்த்ததில் அதில் 86 நாணயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.. பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு அளவுக்கு அந்த தங்க நாணயங்கள் இருக்கின்றனவாம்.. மேல் மூடி உடைந்த நிலையில் இருப்பதால், முழுமையான நாணயங்களும் ஒப்படைக்கப்பட்டதா?ஒருவேளை கூடுதலாக தங்க நாணயங்கள் இருந்திருக்குமோ? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

உலோக நாணயம் தங்கம் தானா?

இதனிடையே, இந்த நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, மீட்கப்பட்டுள்ள உலோக நாணயங்கள், தங்கம் தானா? என்பதும் உறுதி செய்யவில்லையாம்.. இப்போதைக்கு திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகுதான் அது உறுதியாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.

ஆதவனின் விவசாய நிலத்தில் பழங்காலத் தங்கக் காசுகள் கண்டெடுக்கப்பட்ட செய்தி காட்டு தீ போல பரவி, திருப்பத்தூரில் பரபரப்பை தந்துவிட்டது.. உடனடியாக ஆதவனின் நிலப்பகுதியில் பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டு விட்டது பரபரப்பை தந்து விட்டது.

இது குறித்து வட்டாட்சியா் சொல்லும்போது, "மீட்கப்பட்ட நாணயங்கள் தங்கம் என்று இன்னும் உறுதியாகவில்லை என்பதால் அது தொடர்பான ஆய்வு நடத்தப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+