திருவண்ணாமலைக்கு நற்செய்தி.. வேலூருக்கு வந்தது ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசின் அடுத்த சரவெடியை பாருங்க
வேலூர்: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது.

சிறப்பு பஸ்கள்: நடந்து முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் கிடைத்திருந்தன.. அதாவது, 12ம் தேதி சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக் கிழமையை 13ம் தேதி, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்.. அன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதுமட்டுமல்லாமல், ஆடி மாதம் என்பதால், நிறைய பேர், கோயில் திருவிழாக்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காகவே, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பஸ்கள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டது.. அதேபோல, இந்த வாரம் ஓணம் பண்டிகை என்பதால், தொடர் விடுமுறை கிடைத்தது. ஓணம் பண்டிகை + வார இறுதி நாட்கள் + சுப முகூர்த்த திருநாள் என மொத்தமாக சேர்ந்துவந்ததால், 26, 27, 29ம் தேதிகளில் விடுமுறை நாளானது.
எனவே, மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது..
கோயில் நிர்வாகம்: திருவண்ணாமலையில் மாதம்தோறும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி ஆவணி மாத பவுர்ணமியொட்டி, இன்று 30ம் தேதி காலை 10.58 மணிக்கு தொடங்கி, 31ம் தேதி காலை 7.05 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதற்காகவே, பக்தர்களின் வசதிக்காக வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 130 பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்க உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டல பொது மேலாளர், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஸ்பெஷல் அறிவிப்பு: அதில், "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று 30ம் தேதி ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் சென்னையில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்"என்று கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications