என்ன நடக்கப்போகுதோ? ஒரே மேடையில் ஆளுநர் ரவியும் அமைச்சர் பொன்முடியும்! எகிறுதே எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்மையில் அமைச்சர் பொன்முடி விமர்சித்த நிலையில், இருவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரே மேடையில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே இருந்து வருகிறார். அதேபோல் அரசு பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தமிழ்நாட்டின் அரசின் உயர்கல்வித் துறை பார்த்துக்கொள்கிறது. அந்த உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக இருப்பவர்தான் திமுகவின் சீனியரான பொன்முடி.

ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கும் பொன்முடிக்கும் பல்வேறு கருத்து வேறுகள் இருந்து வருகின்றன. தமிழ்நாடு அமைச்சர்களிலேயே ஆளுநரை அதிகமாக விமர்சித்த அமைச்சராக பொன்முடியே இருப்பார். துணை வேந்தர்கள் நியமனம், பட்டமளிப்பு விழா நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருவருக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

TN Minister Ponmudi and Governor RN Ravi to participate in same event

தமிழ்நாடு சட்டசபைத் தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநரின் உரையில் இடம்பெற்ற சில வார்த்தைகளை ஆர்.என்.ரவி தவிர்த்துவிட்டு பேசியதை எதிர்த்து அதே அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனால் ஆர்.என்.ரவி அங்கிருந்து எழுந்து சென்றபோது பொன்முடி கைகாட்டியது அப்போது விவாதப் பொருளானது.

இப்படி இருவருக்கும் இடையிலான பல்வேறு மோதல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பேசி இருந்தார் பொன்முடி. செந்தில் பாலாஜியில் வகித்து வந்த இலாக்காக்களை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்க முதலமைச்சர் வழங்கிய பரிந்துரையையும், செந்தில் பாலாஜி இலாக்க இல்லாத அமைச்சராக தொடர்வதில் விருப்பமில்லை என்றும் ஆளுநர் தெரிவித்ததுதான் பிரச்சனைக்கு காரணம்.

இதனை கண்டித்து பொன்முடி அறிக்கையையே வெளியிட்டுவிட்டார். அதில், "செந்தில்பாலாஜி விஷயத்தில் கடிதம் எழுதும் ஆளுநர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல் ஏன் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எல்லாம் எந்த பதிலையும் கூற ஆளுநருக்கு திராணி இல்லை போலும்.

அதை ஏனோ மறந்துவிட்டு முதலமைச்சர் அனுப்பிய 1.6.2023 நாளிட்ட பதில் கடிதத்தினை வசதியாக மறைத்து விட்டு, தான் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும் லீக் செய்திருப்பது அற்பத்தனமான அரசியல் என்றே கருத வேண்டியதிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேவையற்ற வகையில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி, சரியான காரணத்தை மேற்கோள் காட்டி கடிதம் அனுப்புமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார். இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும், அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகவும் நாங்கள் பார்க்கிறோம்.

அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் செய்து கொண்டு, அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஆளுநர் இப்படி அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கையே தொடர்ந்து ஆளுநர் மேற்கொள்வது வேதனைக்குரியது. கண்டனத்திற்குரியது" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் வேலூரில் நாளை 11 மணியளவில் நடைபெறும் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், அமைச்சர் பொன்முடியும் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+