வேலூரில் விவசாயிகளுக்கு.. திருப்பூரில் இளைஞர்களுக்கு.. தமிழக அரசு வெளியிட்ட 2 சூப்பர் அறிவிப்புகள்
வேலூர்: வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார். அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்பு தொழில் செய்துவரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவுசெய்து அரசு மானிய திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ளவும், மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கவும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீன்பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

5000 மானியம்
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
மீன்வளர்ப்பு விவசாயிகள்
எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்து உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள், விண்ணப்பங்கள் பெற காட்பாடி காந்திநகரில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பூரில் வேலைவாய்ப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் சென்னையை தவிர 37 மாவட்டங்களில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரியலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
64 வகை வேலைவாய்ப்பு பயிற்சி
இந்த பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான செல்போன் பழுதுநீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், வயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
தகுதி என்ன
8-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படும். குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சமாக 45 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தின்போது மதிய உணவும், காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி, தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு சீருடை, பாடப்பொருட்கள் தொழில்முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.
சுயதொழில்
குறிப்பிட்ட சுயதொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன், சரியான தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது முக்கிய நிறுவனங்களுக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டு, அவர்களின் வெற்றிக்கதைகள் நேரடியாக எடுத்துக்கூறப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்
பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். வங்கிக்கடன் பெற பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தையும், திட்ட இயக்குனரையும் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications