திமுக என்றால் என்ன தெரியுமா? உதயநிதி ஸ்டாலின் சொன்ன விளக்கம்.. தேவையில்லாத சர்ச்சை!
Recommended Video

வேலூர்: திமுக தலைமையில் தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 6 மாதத்தில் ஆட்சி அமையும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் லோக்சபா தேர்தல் அடுத்த வாரம் நடக்கிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்காக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

என்ன பேசினார்
இன்று பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுகவின் 37 எம்.பி.க்கள் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இன்னொரு திமுக எம்பி வேலூரில் இருந்து சென்றால், தமிழகத்தின் பலம் இன்னும் அதிகம் ஆகும். மக்களின் கோரிக்கையை திமுக எம்பிக்கள் வலுவாக எடுத்துக் கூற வசதியாக இருக்கும்.

என்ன முடிவு
தமிழகத்தில்தான் லோக்சபா தேர்தலில் வித்தியாசமான முடிவு வந்தது. நாடு முழுக்க பாஜக வெற்றிபெற்றது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் வெல்ல முடியவில்லை. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும் மிக மோசமான தோல்வியை தழுவியது. திமுக மீதான மக்களின் நம்பிக்கையை இது காட்டுகிறது.

அடிமை
தமிழகத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் மோடிக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் யாருக்காவது அடிமையாக இருந்தே பழக்கப்பட்டுவிட்டார்கள். மோடிக்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் அடிமையாகி ஆட்சி செய்து வருகிறார்கள்.

விளக்கம்
டிஎம்கே என்றால் வெறும் திமுக மட்டுமல்ல. அதை நீங்கள் டி.எம்.கதிர் ஆனந்த் என்றும் கூட அழைக்கலாம். அப்படிப்பட்ட டி.எம்.கதிர் ஆனந்த்தான் உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த ஆனந்திற்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

என்ன சர்ச்சை
அவரின் இந்த புது மாதிரி விளக்கம் ஒரு பக்கம் வைரலாகி உள்ளது. அட இது கூட நல்லா இருக்கே என்று பலர் கூறி உள்ளனர். அதே சமயம் இன்னொரு பக்கம் அவரின் இந்த விளக்கத்தை சிலர் விமர்சனம் செய்தும் இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications