மொட்டை மாடியில் சொத்துக்காக மனைவி செய்த வேலை.. ரிடையர்டு அரசு பஸ் டிரைவர் பரிதாபம்.. இப்படி ஒரு மகனா

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சொத்து விஷயம் அநியாயமாக ஒரு உயிரையே பறித்து விட்டது.. வாலாஜாபாத்தில் இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. சென்னை வீட்டின் வாடகை பணம் தொடர்பாக தொடங்கிய பிரச்சனை, நாளுக்கு நாள் பெரிதாகி ஒரு கட்டத்தில் எல்லை மீறி விட்டது.. இதுகுறித்து முதலில் குடும்பத்தினர் வேறு மாதிரி சொல்ல, போலீசாருக்கு மட்டும் ஏதோ சந்தேகம் பொறி தட்டியது.. கடைசியில்தான் நடந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை தந்து வருகிறது.

வாலாஜாபாத் அருகே 70 வயது ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.. அதிகாலையில் அங்கு நடந்த சண்டை அவரது உயிரையே பறித்தது.. அதன்பிறகு, மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களை நம்ப வைக்க முயன்ற குடும்பத்தினரின் நாடகமும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

Property Valajabad Murder

ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர்

வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவபாதம்.. 70 வயதாகிறது.. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரான இவருக்கு ரேணுகா (50) என்ற மனைவியும், மதுசூதனன் என்ற மகனும் உள்ளனர். மதுசூதனன் என்ஜியரிங் படித்துள்ளார்.. தனியார் கப்பல் கம்பெனியில் வேலை பார்த்தும் வருகிறார்.. அவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.

ஓஎம்ஆர் வீட்டு வாடகை பணம்

சிவபாதம் குடும்பத்துக்கு ஓஎம்ஆர் சாலை மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சொந்தமாக வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். அவற்றிலிருந்து வரும் வாடகை பணத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறார்.. இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு மதுசூதனன் வேலையை விட்டுவிட்டு ஓஎம்ஆர் சாலையில் உள்ள வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு பெற்றோர், மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.

சிவபாதத்துக்கு சர்க்கரை நோய் இருந்ததால் மருந்து, மாத்திரைகளுக்காக அதிகம் செலவு செய்து வந்தார். மனைவி, மகனுடன் அடிக்கடி சண்டை ஏற்படும்போதெல்லாம், சொந்த ஊரான மருதத்துக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவதும் வழக்கம். அப்படித்தான் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மருதம் வீட்டுக்கு வந்துள்ளார்.

சர்க்கரை நோய் மருந்து

ஒரு மாதமாகி விட்டதால், அவரிடமிருந்த சர்க்கரை நோய்க்கான மருந்து, மாத்திரைகள் தீர்ந்துவிட்டன... அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாததால் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மருதத்தில் கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடந்துள்ளது. அதற்காக சென்னையில் இருந்து ரேணுகாவும், மதுசூதனனும் மருதத்துக்கு வந்தனர். அப்போது, "எதுக்காக மாதக்கணக்கில் இங்கே வந்து தங்கியிருக்கீங்க? தேவையில்லாமல் ஏன் அதிகமாக செலவு செய்றீங்க? கடன் பிரச்சனையும் அதிகமாகிட்டே போகிறது.. சென்னைக்கு வந்துவிட்டால் இந்த பிரச்சனை இருக்காது" என்று கூறி சிவபாதத்தை அழைத்துள்ளனர்.

அனாதை ஆசிரமத்துக்கு சொத்து

ஆனால் சிவபாதம் வர மறுத்துவிட்டார். "சென்னை வீடுகளிலிருந்து வரும் வாடகை பணத்தை எனக்கு தந்துவிடுங்கள்.. என் செலவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்" என்று கேட்டுள்ளார். இதற்கும் ரேணுகாவும், மதுசூதனனும் சம்மதிக்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிவபாதம், "எனக்கு செலவுக்கு பணம் தராவிட்டால், என் பெயரில் உள்ள மொத்த சொத்துகளையும் உறவினர்களுக்கும், அனாதை ஆசிரமத்துக்கும் எழுதி வைத்து விடுவேன்" என்றார்.. இதைக்கேட்டதுமே மனைவிக்கும், மகனுக்கும் தூக்கி வாரிப்போட்டது.

மொட்டை மாடியில் விடிகாலை

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் சிவபாதம் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரேணுகாவும், மதுசூதனனும் சேர்ந்து சிவபாதத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டார்கள்.. கால், கழுத்து பகுதிகளில் வெட்டு விழுந்ததில் சிவபாதம் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

உடனே விடியும் முன்பேயே மொட்டை மாடியில் கிடந்த ரத்தக்கறைகளை ரேணுகா சுத்தம் செய்துள்ளார்.. பொழுது விடிந்ததுமே சிவபாதம் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சொல்லி கதறி அழுது ஒப்பாரி வைத்துள்ளார்.. இதையடுத்து, உறவினர்களும், நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் திரண்டு வந்தனர்.. இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளன.

கிடுக்கிப்பிடி விசாரணை

ஆனால் சிவபாதத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்த்தனர். உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்...

தொடர்ந்து ரேணுகா, மதுசூதனனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணையும் நடத்தினர். கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். சொத்து பிரச்சனையில் தாங்கள்தான் சிவபாதத்தை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 2 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.. சொத்துக்காக கணவரை கொலை செய்து, ரத்தத்தை கழுவிவிட்டு, மாரடைப்பு என நாடகமாடிய இந்த சம்பவம் மருதம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+