வாணியம்பாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை அமுதாவுக்கு ஆடியோவால் வந்த சிக்கல்.. கிடைத்த பரிசு
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் அமுதா. இவர், சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகியது. அந்த ஆடியோவில், தமிழக அரசின் திட்டமான நான் முதல்வன் திட்டத்தை குறை கூறியதுடன் பட்டியலின மக்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமுதா, நிம்மியம்பட்டுவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவரிடம் பேசியதாக ஆடியோ சமீபத்தில் வெளியாகியது.

அதில் கல்லூரி கனவு திட்டம் அந்த திட்டம் இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வித்துறை அதிகாரிகள் உயிரை எடுப்பதாக சில அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு எனக்கூறிக் கொண்டு சிலர் வந்து கேள்வி கேட்பது அருவெறுப்பாக உள்ளதாகவும் கூறினாராம். ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களை இழிவாக பேசியும், அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு என்பது தேவையா? என அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது.
அதாவது 'கல்லூரி கனவு திட்டம், அந்த திட்டம், இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வி துறை அதிகாரிகள் உயிரை எடுக்கிறார்கள் என்றும் அரசின் திட்டங்களையும், அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு எனக் கூறிக் கொண்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து கேள்வி கேட்பது அருவெறுப்பாக உள்ளது என்றும் அமுதா பேசியதாக ஆடியோ ஒன்று பெயரில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை அமுதாவை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications