வாணியம்பாடி சுஹாசினி, வள்ளியூர் சுனில், கோவை ராணி.. தாளாளருக்கு முத்தம்! நெகிழ வைத்த பிளஸ் 2 ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கும் சூழலில், ஏராளமான நெகிழ்ச்சி தருணங்களும், மகிழ்ச்சி சம்பவங்களும் தமிழகத்தின் பள்ளிகளில் நடந்துள்ளன.. பொதுத்தேர்வுக்காக கடினமாக உழைத்த மாணவர்கள் முகத்தில் இன்றைய தினம் வெற்றிப்புன்னகையை பார்க்க முடிந்தது.. மாணவர்களின் வெற்றியால், பெற்றோர்களைவிட், ஆசிரியர் பெருமக்களின் அளவிலா மகிழ்ச்சி தமிழகத்தின் கவனத்தையும் பெற்று வருகிறது.

இன்று பிளஸ் 2 தேர்வு ரிசல்ட் வெளியானது.. இதில், தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கடந்த வருடத்தைவிட இப்போது 95.03 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

Vaniyambadi Kovai plus 2 result

வள்ளியூர் சுனில்குமார்

நெல்லை வள்ளியூரில், கடந்த மார்ச் 3ம் தேதி அதிகாலை சுபலட்சுமி இறந்துவிட்டார்.. அன்றுதான் இவரது மகன் சுனில் குமாருக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.. தாய் இறந்த சோகத்தை தாங்கி கொண்டு சுனில்குமார் பொதுத்தேர்வு எழுதிவிட்டு, பிறகு தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

தேர்வுக்கு கிளம்பி சென்றபோது சுனில்குமார் இறந்த தன்னுடைய தாயின் பாதத்தை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு சென்ற சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இன்று மாணவன் சுனில்குமார் 600-க்கு 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். என் அம்மா மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிக மார்க் எடுத்திருப்பேன் என்று சொல்கிறார் சுனில்குமார்.

வாணியம்பாடி சுஹாசினி

வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சுஹாசினி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்ற அச்சத்தில், பஸ்ஸை பின் தொடர்ந்து ஓடினார்.. படியிலுள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, ஆபத்தான முறையில் நீண்ட நேரம் ஓடினார்.

Vaniyambadi Kovai plus 2 result

இந்த வீடியோ வைரலானதால் பஸ்ஸை நிறுத்தாமல் சென்ற டிரைவர் முனிராஜ், கண்டக்டர் அசோக் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று அம்மாணவி சுஹாசினி 437 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதில், அரியலூர் 98.32%, ஈரோடு 96.88%, திருப்பூர் 95.64%, கன்னியாகுமரி 95.06%, கடலூர் 94.99%. தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் பழனி மாணவியும், திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த மாணவனும் +2 பொதுத்தேர்வில் 600க்கு 599 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்..

Vaniyambadi Kovai plus 2 result

தாளாளருக்கு கட்டிப்பிடித்து முத்தம்

பழனி மாணவி ஓவியாஞ்சலி 599 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்ததால், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பட்டாசுகளை வெடித்தும், கைகளை தட்டியும் மாணவியை பள்ளிக்குள் வரவேற்றனர்.

Vaniyambadi Kovai plus 2 result

அதேபோல, காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டுவரும் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.. இதைக்கேள்விப்பட்டதுமே மாணவர்கள் அனைவரும், அந்த பள்ளியின் தாளாளரை கட்டிப்பிடித்து முத்தம் தந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிலும் இந்த பள்ளியில் ஒரு மாணவர் 591 மார்க் எடுத்துள்ளார்..

கோவை ராணி

கோவையை சேர்ந்தவர் ராணி.. இவருக்கு 70 வயதாகிறது.. இவருடைய கணவர் உயிரிழந்து விட்டார். வீட்டில் தனியாக இருந்த இவருக்கு படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.. எனவே, வீட்டில் இருந்தபடியே 12ம் வகுப்புக்கான பாடங்களை படித்து, தேர்வில் கலந்து கொண்டார். இன்றைய தினம் 346 மதிப்பெண்கள் பெற்று, அவர் தேர்ச்சி அடைந்து உள்ளார் ராணி..

Vaniyambadi Kovai plus 2 result

தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும், வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்களும் என மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி அடைந்துள்ளதுடன், கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதையும் நிரூபித்துள்ளார் மூதாட்டி ராணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+