திருமாவை விமர்சித்தவர்.. நடுரோட்டில்.. அடித்து உதைத்து சட்டையை கிழித்த விசிக.. வெலவெலத்த வேலூர்!
பத்திரிகை ஆசிரியர் குணசேகரனை விசிகவினர் சரமாரியாக அடித்துள்ளனர்
Recommended Video
வேலூர்: "நடுரோட்டிலேயே பத்திரிகை ஆசிரியரின் சட்டையை கிழித்து... சரமாரியாக அடித்து நொறுக்கி உள்ளனர் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள்.. இதனால் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"சனாதன கல்வியை வேரறுப்போம்" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, "அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள்" என்று தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சு இந்து மதத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாகவும் சொல்லி, தங்கள் அதிர்ச்சியையும்,கோபத்தையும் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

ஆன்மீக நம்பிக்கை
மேலும் இந்துமதத்தையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் அவதூறு, ஏளனம் செய்து பேசி வரும் திருமாவளவனின் பேச்சினை கண்டிக்கும் பொருட்டு, இந்து மத நம்பிக்கையாளர்கள் பல்வேறு வகையில் சோஷியல் மீடியாவில் தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.. மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை கொடுத்தபடியே உள்ளனர்.

விடுதலை சிறுத்தையினர்
இந்நிலையில் ராணிப்பேட்டையில் "கலைஞர் பாதை" என்ற பத்திரிகையை நடத்தி வருபவர் குணசேகரன் என்பவர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேரந்தவராம். தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவனுக்கு எதிராக ஒரு பதிவு ஒன்றை பதிந்துள்ளார். கட்சியில் இருந்து கொண்டே இப்படி எதிரான கருத்தை போடுவதா என்று, அந்த பகுதி விசிக நிர்வாகிகளே கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்
முத்துகடை பகுதியில் குணசேகரன் சென்று கொண்டிருந்தபோது, மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ், காரை.தமிழ்,மற்றும் நிர்வாகிகள் சிலர், அவரை வழிமறித்து குண்டர்களை வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். நடுரோட்டில் மிருகத்தனமாக அடித்து உதைத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் சட்டை கிழிந்து.. பலத்த காயமடைந்தார் குணசேகரன்!

கண்டனங்கள்
கருத்துப்பதிவை கருத்துப்பதிவால் எதிர்நோக்காமல் இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியரை நடுரோட்டில் நாயை அடிப்பது போல அடிக்கலாமா என்றும், இதுதான் அணுகுமுறையா என்றும் இதற்கு கண்டனங்கள் எழ தொடங்கி உள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications