வேலூரில் மண்ணில் மின்னிய பொருள் என்ன? வித்தியாசமான சத்தம்! அடுத்தடுத்து வந்த சிலைகளால் மக்கள் பரவசம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்பகுதிகளில், கடந்த சில மாதங்களாகவே சிலைகள் சாமி சிலைகள் கிடைத்து வருகிறது.. இவைகளை தமிழக அரசு மீட்டு ஆய்வு செய்து வருகிறது. மண்ணிலிருந்து அவ்வப்போது மேலே கிளம்பி வரும் இதுபோன்ற சிலைகளை கண்டு பக்தர்கள் பரவசமடைந்து வருகின்றனர்.. அதேபோல, கடலூர் மாவட்டத்திலும் இப்படியான கடவுள் சிலைகள் கிடைத்த நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சாமி சிலைகள் தென்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களை திகைப்பில் ஆழ்த்தி வருகிறது..

கடந்த மாதம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, ஐம்பொன் சிலை ஒன்று நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே மீண்டும் காட்டுமன்னார்கோவிலில், இதே போன்ற ஐம்பொன் சிலை கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது.

Vellore Sami Idols temple

கடலூர் காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் இப்படி ஐம்பொன் சிலைகள் கிடைப்பது இது புதிதல்ல.. சமீப மாதங்களில் மட்டுமே தொடர்ந்து இந்த பகுதிகளில் கடவுள் சிலைகள் கிடைத்துவருகின்றன. கண்டெடுக்கப்படும் அந்த சிலைகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்புடன் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு, அது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.. வேலூர் அடுத்துள்ள அன்பூண்டி என்ற ஊராட்சி.. இங்கு 1000 ஆண்டுகள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானது..

தமிழக அரசு அதிரடி

பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த இந்த கோயில் கட்டிடம் பழுதடைந்து பராமரிப்பின்றி கிடந்தது.. எனவே, கோயிலை புதுப்பித்து, சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்..

அதன்படியே, கோயிலை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், இந்த கோயிலின் திருப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் கடந்த மாதம் துவங்கி வைத்திருந்தார்.

இதையடுத்து அனைத்து சம்பிரதாய நடவடிக்கைகளும் முடிந்த நிலையில், திருப்பணி கடந்த சில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது.. நேற்றைய தினமும், ஜேசிபி மூலம் மண்ணை தோண்டியெடுக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது..

மண்ணில் வித்தியாசமான சத்தம்

அப்போது, திடீரென வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டது.. மிஷினில் மண் அள்ளும்போது இப்படியான விநோத சத்தம் வரவும், அங்கிருந்த ஊழியர்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் உஷாரஜினி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்துவிட்டனர். அதற்குள் சுற்றுவட்டார பகுதி முழுக்க இந்த தகவல் பரவிவிடவும், பொதுமக்களும் அங்கே குழுமிவிட்டனர்.

பிறகு சத்தம் வந்த இடத்தில் மீண்டும் தோண்டப்பட்டது.. அங்கிருந்த மண்ணை அள்ளும்போது 4 சாமி சிலைகள் அதில் இருந்ததை கண்டு அனைவருமே வியப்புற்றனர்..

விநாயகர் சிலை, அம்மன் சிலை, நடராஜர் சிலை, விஷ்ணு சிலை என்று ஒன்றன்பின் ஒன்றாக அந்த சிலைகள் வெளிவந்தன.. பஞ்சலோக சிலைகளா அல்லது செப்பு சிலைகளா என்பது தெரியவில்லை. ஆனால், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த சிலைகள் அனைவரையும் ஈர்த்தன..

வியப்பூட்டும் சிலைகள்

அதிலும், அம்மன் சிலை மட்டுமே சுமார் 2 அடி உயரம் இருக்கிறதாம்.. மற்ற சிலைகள் ஒன்றரை அடி உயரம் கொண்டவையாக உள்ளன.. ஆனால், சிலையை பார்த்ததுமே, ஊர் மக்கள் உடனே அபிஷேகம் செய்ய துவங்கிவிட்டனர்..

இந்த சிலைகள் திருத்தாளீஸ்வரர் கோயிலுக்கு உடமையான சிலைகளாக இருக்கலாம் என்றும், அந்நியர் படையெடுப்பின்போது ஊர் பெரியவர்களே, பூமியில் இந்த சிலைகளை புதைத்திருக்கலாம் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

1000 வருட பழமையான கோவில்

4 சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்த பிறகுதான் தெரிய வரும் என்று என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் உஷா ரஜினி.

தற்போது அறநிலையத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள்., இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.. வேலூரில் 1000 வருட பழமையான திருத்தாளீஸ்வரர் கோயிலில், பழமையான 4 சுவாமி சிலைகள் கிடைத்திருப்பது மாவட்ட மக்களை திக்குமுக்காட செய்து வருகிறது. ,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+