வேலூரில் 7 ஏக்கர் நிலம்.. பஸ் ஸ்டாண்டில் முளைத்த சிக்கல்.. "மிரட்டறேனா?" கே.சி. வீரமணி பரபர விளக்கம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் 7 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சினையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டுவதாக அதிமுக பிரமுகர் ரிஷிகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தந்துள்ள நிலையில், இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் ரிஷிக்குமார்.. இவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தந்துள்ளார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

vellore kc veeramani

புது பஸ் ஸ்டாண்டு: "வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் நான் பார்க்கிங் நடத்தி வருகிறேன். இந்த இடம் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த பிரம்மானந்தா தாண்டா மற்றும் சேகர் ரெட்டி ஆகிய இருவருக்கும் சொந்தமானது. இந்நிலையில் இன்று (நேற்று) அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பார்க்கிங் இடத்தை மாலை 6 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மிரட்டினார்.

நான் சேகர்ரெட்டி மற்றும் பிரம்மானந்தா தாண்டா ஆகிய இருவரும் அறிவுறுத்தி தான் நான் இந்த பார்க்கிங் நடத்தி வருகிறேன். ஆனால் தற்போது திடீரென முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்னை மிரட்டி வருகிறார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

விசாரணை: இந்த மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ரிஷிகுமார், "வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் சுமார் 7 ஏக்கர் அளவுள்ள நிலத்தை பிரம்மானந்தாவும், சேகர் ரெட்டிக்கு சேர்ந்து வாங்கினார்கள்.. அவர்கள் சொன்னதன் பேரில் கடந்த 5 வருடங்களாக அங்கு பார்க்கிங் பாயின்ட் நடத்தி வருகிறேன்.

அந்த இடத்தில் இருந்து என்னை காலி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டினார். இதுகுறித்து, அண்ணனிடம் (சேகர் ரெட்டி) பேசியபிறகே, இந்த புகாரை நான் தருகிறேன்.. இந்த இடத்துக்கும் கே.சி.வீரமணிக்கு எந்த தொடர்பும் இல்லை. கடந்த 5 வருடங்களாக அந்த இடத்தை நான்தான் பராமரித்து வருகிறேன்" என்றார்.

வீரமணி மறுப்பு: ஆனால், இந்த புகாரை கே.சி.வீரமணி மறுத்துள்ளாராம்.. "என்னுடைய நண்பர் பிரம்மனந்தாவும், சேகர் ரெட்டியும் சேர்ந்து 7 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். இதில், 70% பிரம்மானந்தாவுக்கும், 30% சேகர் ரெட்டிக்கும் சொந்தமானது. ரிஷிகுமார் என்னுடைய கட்சிக்காரர்தான்.

இப்போது அந்த இடத்தை மொத்தமாக அபகரிக்க சேகர் ரெட்டி நினைக்கிறார்.. பிரம்மானந்தாவிடம் இருந்து அந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்.. அந்த இடம் தொடர்பாக என்னுடைய வீட்டில் பிரம்மானந்தா நேற்று பேசிக் கொண்டிருந்தார். "என்னுடைய செல்போனில் இருந்து ரிஷிகுமாருக்கு தொடர்புகொண்டு பிரம்மானந்தாவுடன் பேசுங்கள்" என்று சொன்னேன். அந்த இடத்தை காலி செய்து கொடுக்கும்படி அவர்தான் ரிஷிகுமாரிடம் பேசினார்.

மிரட்டவில்லை: இந்த விஷயத்தை சேகர் ரெட்டியிடம் ரிஷிகுமார் எப்படி சொன்னார் என்று தெரியாது.. ஆனால், அவர் கூறியதாகக்கூறி என்மீது புகார் கொடுத்துள்ளார். என்னுடைய செல்போனில் இருந்து அவரை தொடர்புகொண்டது மட்டுமே உண்மை. ஆனால், நான் மிரட்டவில்லை, மிரட்டியதாக ரெக்கார்டு இருந்தால் தரட்டும்.

ரிஷி குமார் கட்சி தொடர்பாக என்னுடன் அடிக்கடி பேசுபவர்.. ஆனால் எதற்காக இந்த மாதிரியான புகார் ஒன்றை தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை.. நண்பர் என்ற முறையில், அந்த இடத்தை வாங்கி வைத்தால் பிற்காலத்தில் உதவும் என்று பிரம்மானந்தாவிடம் நான்தான் சொல்லி, அந்த இடத்தை வாங்க வைத்தேன். அவருக்கு பின்னால் நான் இருப்பதால் என் மீது புகார் தந்துள்ளனர்" என்று விளக்கம் தந்துள்ளாராம் வீரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+