வேலூரில் அரசு நிலத்தில் பறந்த 8 கோழிகள்.. திருப்பத்தூரை திகைக்க வைத்த சம்பவம்.. அது என்ன அரிசி?
வேலூர்: கோழி விவகாரம் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று, திருப்பத்தூர் மாவட்டத்தை பரபரக்க வைத்துள்ளது.. இது தொடர்பான விசாரணையையும் ஜோலார்பேட்டை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. ஆனால், போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.. அப்படி என்ன நடந்தது ஜோலார்பேட்டையில்?
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள மண்டலவாடி அரசு வட்டம் பகுதியில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் ஒரு விவசாயி. பல வருட காலமாகவே ஏராளமான ஆடு, மாடு, கோழிகளை வைத்து, அந்த பகுதியிலேயே விவசாயம் பார்த்து வருகிறார்.

வேலூரில் அரசு நிலத்தில் 8 கோழிகள்
இவரது மகன் சரவணனுக்கு தற்போது 39 வயதாகிறது.. தந்தையின் தொழிலையே இவரும் பார்த்து வருகிறார்.. இவர் வழக்கமாக தன்னுடைய கோழிகளை, அருகிலுள்ள திறந்த நிலப்பரப்பில் மேய்ச்சலுக்கு விடுவார்.. அந்த கோழிகளும் தீவனத்தை சாப்பிட்டுவிட்டு, சரவணனின் வீட்டுக்கு மாலையில் திரும்பி விடும்.
மேய்ச்சலுக்கு விட்ட அந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த இடம் தனது சொந்த இடம் என்று கூறி, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் கூறி வந்துள்ளனர்.. இது தொடர்பாக அடிக்கடி சரவணனிடமும் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது..
அரிசி - 2 பேர்
இதனால் பகைமை வளர்ந்த நிலையில், ஒருகட்டத்தில் அந்த கோழிகளை கொன்றுவிடுவது என்று ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி இருவரும் முடிவு செய்தனர்.. இதற்காக அவைகளை கொல்லும் நோக்கில் அரிசியில் விஷ மருந்து கலந்து வைத்ததாக தெரிகிறது..

அந்த விஷம் கலந்த அரிசியை கோழிகள் மட்டுமல்லாமல், மைனா, புறா உள்ளிட்ட பறவைகளும் உட்கொண்டிருக்கின்றன.. இதன் விளைவாக 8க்கும் மேற்பட்ட கோழிகளும், பல பறவைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இதை கண்ணால் கண்ட சரவணன், சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களை தட்டி கேட்டுள்ளார்.
திருப்பத்தூர் போலீஸ்
அதற்கு கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமமூர்த்தி குடும்பத்தினர் தடி எடுத்துக்கொண்டு, சரவணனை கொலை செய்யும் வகையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோழி விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால், சரவணன் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. ஆனால், புகாரை ஒருதலைப்பட்சமாக விசாரித்ததாகவும், "கோழிகளை கூண்டில் வைத்து வளர்க்க வேண்டும்" என உதவி ஆய்வாளர் பாலமுருகன் சொன்னதாகவும் சரவணன் வேதனை தெரிவித்துள்ளார்.
வனத்துறைக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலத்தில் கோழிகள் மேய்ந்ததையே காரணமாக்கி, விஷம் வைத்து உயிர்களை அழித்த சம்பவம் மனிதாபிமானம் இல்லாத செயல் என அப்பகுதி மக்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.













Click it and Unblock the Notifications