அறியாத வயசு.. புரியாத மனசு.. கடத்தப்பட்ட சிறுமி.. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நவீன்குமார்
வேலூர் : வேலூர் மாவட்டம் திருவலம் அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த மூட்டை தூக்கும் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண் இவர் நர்சிங் படித்து விட்டு பாதியில் நின்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த இவர் கடந்த 4ஆம் தேதி திடீரென மாயமாகியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மகளை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை எனவே இது குறித்து அருகில் உள்ள திருவலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் அதன்பேரில் உதவி ஆய்வாளர் நாராயணன் வழக்கு பதிவு செய்து திருவலம் போலீசார் மாயமான மைனர் பெண்ணை தேடி வந்தனர்.

காட்பாடியில் ரோந்து
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காஞ்சனா திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மைனர் பெண்
அப்போது சேர்க்காடு பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபர் மற்றும் மைனர் பெண்ணை பிடித்து விசாரித்தனர் விசாரணையில் மாயமான மைனர் பெண் என்பதும் அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மேல்மலையனூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்த நவீன் குமார் என்பதும் தெரியவந்தது.

காதல் திருமணம்
நவீன் குமார் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்ததும் அப்போது மைனர் பெண் நர்சிங் படித்துவந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது நவீன் குமார் மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது/

போக்சோவில் கைது
இதையடுத்து போலீசார் நவீன்குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து வழக்குப்பதிவு செய்து காட்பாடி சப் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி நவீன்குமாரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications