வேலூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விஏஓவை ஆடிப்போக முதியவர்.. 4 பிரிவில் பாய்ந்த வழக்கு
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் முகாம் நடந்தது. இந்த முகாமில் வனத்துறையினர் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதிகாரிகள் துணை போவதாக ஒரு முதியவர் குற்றம்சாட்டினார். அவர் ஆவேசமாக பேசியதுடன், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகளை வசைபாடினாராம். இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் அரசு அதிகாரிகளை அசிங்கமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக முதியவர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் முகாமானது நேற்று நடைபெற்றது இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளைக் கோரிக்கை மனுக்களாக அரசு அலுவலர்களிடம் வழங்கினர் இந்நிலையில் உப்புப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடபதி (60) என்ற முதியவர் அந்த கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அந்த இடத்தினை மீட்க வேண்டும் எனக்கூறி கோரிக்கை மனுவை வழங்கியதாக தெரிகிறது..

இந்த மனுவை வழங்கிய பின்பு அவர் வனத்துறையினர் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் அதேபோல் நான் கொடுத்த மனுவிற்கு ரசீது ஏன் தரவில்லை என முகாமில் ஆபாச வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீன் என்பவர் முதியவரிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததோடு கிராம நிர்வாக அலுவலருக்கும் முதியவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் முதியவர் வெங்கடபதிக்கு கண்ணின் ஓரமாக லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது..
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு தாலுக்கா உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் முதியவரை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து முகாமில் ஆபாச வார்த்தைகளால் கூச்சலிட்டதால் அவரை போலீசார் அங்கிருந்த அழைத்து சென்றதாக கூறப்படுகிறது,.
இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீன் கொடுத்த புகாரின் பேரில் முதியவரை ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முகாமில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications