வேலூரில் அதிசயம்.. குளத்திலிருந்து திடீரென வெளியே வந்த "சிவலிங்கம்".. அந்த பொண்ணு யாரு? வியந்த ஊசூர்
வேலூர்: 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி தூர்வாரும்போதுதான், இப்படியொரு அதிசயம் வேலூர் மக்களுக்கு கிடைத்துள்ளது.. என்ன நடந்தது?
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்துள்ளது சேக்கனூர் ஊராட்சி.. இங்குள்ள பெரிய ஏரியில், 100 நாள் வேலை திட்டத்தில் புதிய குளம் வெட்டும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த குளத்தை தூர்வாரி. கரையை பலப்படுத்தும் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.

கடப்பாறை: இந்நிலையில், நேற்றைய தினமும், 100 நாள் வேலை தொழிலாளர்கள், சுமார் 150க்கும் மேற்பட்டோர் வழக்கம்போல் பணிக்கு வந்தார்கள்.. கையில் கடப்பாறை, மண்வெட்டிகளை கொண்டு, மண்ணை வாரி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்படி பள்ளம் வெட்டும்போது திடீரென ஒரு கல் தென்பட்டது.. அந்த கல் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்திருக்கிறது. எனவே, அந்த கல்லை சுற்றிலும் இருந்த மண்ணை அகற்றி பார்த்தபோதுதான் தெரிந்தது, அது சிவலிங்கம் என்று.
2 அடி உயரத்துக்கு அந்த சிவலிங்கம் இருப்பதை பார்த்து தொழிலாளர்கள் அத்தனை பேரும் திகைத்துபோய் நின்றுவிட்டார்கள்.. மண்ணை தோண்டும்போது சிவலிங்கம் கிடைத்த இந்த தகவல், சுற்றுவட்டாரத்தில் வேகவேகமாக பரவியது..
திரண்ட ஜனம்: கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சேக்கனூர், அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து குளத்தங்கரையில் திரண்டார்கள்.. பிறகு, தங்களுக்கு பொக்கிஷமாக கிடைத்த அந்த சிவலிங்கத்திற்கு 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.. பின்னர் மஞ்சள், குங்குமம், திருநீறு பூசி, ஊதுபத்தி, கற்பூரம் ஏற்றி பூ வைத்து அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகளிலும் ஈடுபட்டனர்.
அதற்குள் இந்த தகவல் அதிகாரிகளுக்கும் தெரிந்து விரைந்து வந்தனர்.. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ்பாபு, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, VAO கிருஷ்ணவேணி, கிராம உதவியாளர் சச்சிதானந்தம், ஊராட்சி வார்டு உறுப்பினர் வேணுகோபால், ஊராட்சி செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது குறித்து, 100 நாள் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்..
பாதுகாப்பு அறை: இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, அணைக்கட்டு தாசில்தார் வேண்டாவுக்கு தகவல் தந்தார். அவரது உத்தரவின்பேரில் கண்டெக்கப்பட்ட சிவலிங்கம், அணைக்கட்டு தாலுகா ஆபீசுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது...
இதுகுறித்து வருவாய்த்துறையினர் சொல்லும்போது, குளம் வெட்டும் பணியின்போது கிடைத்த சிவலிங்கம் பழங்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்த பிறகுதான் இது பழங்கால சிவலிங்கம் தானா என்பது உறுதி செய்யப்படும்' என்றனர்.
பரவசம்: எனினும், குளத்தை வெட்டும்போது தங்களுக்கு அரிய பொக்கிஷமாக கிடைத்த, சிவலிங்கத்தினால் வேலூர் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, பெரிய ஏரியில் சிவலிங்கத்துக்கு, ஆரத்தி எடுத்து பூஜை செய்து வழிபட்டபோது, நூறு நாள் வேலை திட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர் திடீரென சாமி வந்து ஆடினார்... இதைப் பார்த்த அங்கிருந்த சக தொழிலாளர்கள் பக்தி பரவசத்துடன் அவரை அமைதிப்படுத்தினார்கள்.
ஆனால், சிவலிங்கம் கிடைத்த இந்த பெரிய ஏரியானது, பல வருடங்களாகவே பாழடைந்து தூர் வாரப்படாமல் இருந்திருக்கிறது.. இப்போதுதான் தூர் வாரும் பணி ஆரம்பமாகி உள்ளது.. இந்த இடத்தில் வேறு ஏதாவது புதையுண்ட கோயில் இருக்கலாம் என்கிறார்கள்.. எனவே, மேலும் நிறைய சாமி சிலைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
கோரிக்கை: எனவே, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தற்காலிகமாக பள்ளம் வெட்டுவதை நிறுத்திவிட்டு, மற்ற பகுதியில் குளம் வெட்டும் பணியில் ஈடுபட ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.. அதேசமயம், தொல்லியல் துறையினர் சிவலிங்கம் கிடைத்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வேலூர் மக்கள் கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications