அந்த அளவுக்கு தமிழகத்தின் மானத்தை வாங்கி இருக்காங்க... வேலூரில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended Video

வேலூர்: பிரதமர் மோடியின் அடிமைகள் யார் என்று கேட்டால் சரியாக மக்கள் சொல்வதாகவும் அந்த அளவிற்கு தமிழகத்தின் மானத்தை வாங்கி இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

உதயநிதி குற்றச்சாட்டு
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் "
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் திமுக மீது எப்படியாவது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பொய்யான ஒரு பழியைப் போட்டு தேர்தலை நிறுத்தினர்.

அதிமுக டெபாசிட் வாங்க கூடாது
ஆனால் தற்போது வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெற போகிறது அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றியடையச் செய்ய வேண்டும்
. அதேபோன்று எதிர்க் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் வாங்காத அளவிற்கு கதிர் ஆனந்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தின் மானம்
தமிழகத்தில் பிரதமர் மோடியின் அடிமைகள் இரண்டு பேர் இருக்கின்றார்கள். தமிழகத்தின் முதல்வர் யார் என்று கேட்டாலும் தெரியாது. ஆனால் பிரதமர் மோடியின் அடிமைகள் யார் என்று கேட்டால் சரியாக மக்கள் சொல்கிறீர்கள். அந்த அளவிற்கு தமிழகத்தின் மானத்தை வாங்கி இருக்கிறார்கள்.

முதல்வருக்கே பாதுகாப்பில்லை
தமிழகத்தின் முதல்வர் பழனிச்சாமி தமிழகத்துக்கு வர வேண்டிய எந்த ஒரு திட்டத்தையும் வரவிடாமல் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜகவிடம் அடகுவைத்து தன்னுடைய முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்து போனார் என்பது யாருக்கும் தெரியாது . ஒரு முதல்வருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ஆகையால் இந்த ஆட்சிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்" இவ்வாறு பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications